অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வயிற்றுபோக்கு

வயிற்றுபோக்கு

பேதி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதும் அதன் படி நடவடிக்கை எடுப்பதும் ஏன் அவசியம்?

பேதி, நீர்பற்றாக்குறையாலும் மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டாலும், ஒரு ஆண்டில் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கின்றன. பேதியால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம், ஏனெனில் குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே நீர் பற்றாகுறை ஏற்பட்டுவிடும். பேதியால் அவதிப்படும் 200 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கிறது.

பேதி வாயின்மூலம் உள்ளே செல்லும்கிருமியால், குறிப்பாக மனித கழிவுகளிலிருந்து உருவாகும் கிருமிகளால் ஏற்படுகிறது. பாதுகாப்பில்லாமல் வெளியேற்றப்படும் மனித கழிவுக, அசுத்தமான பழக்கவழக்கங்கள் அல்லது சுத்தமான நீரின் பற்றாகுறை போன்றவற்றால் பேதி ஏற்படுகிறது. தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் சிசுக்களுக்கு பேதி வருவது மிகவும் குறைவு.

குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் சேர்ந்தும், அரசு அல்லது அரசு அல்லாத நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டால், பேதி உருவாகும் சூழ்நிலைகளை தவிர்க்க அதிகமாக செயல் பட முடியும்...

முக்கிய குறிப்புகள்

பேதி பற்றி ஒவ்வொரு குடும்பம், சமூகமும் உரிமையுடன் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

  1. பேதி நீரை வெளியேற்றி, உடலில் நீர்பற்றாகுறை ஏற்படுத்துவதன்மூலம் குழந்தைகளை உயிரிழக்க செய்கிறது. பேதி தொடங்கியவுடன், குழந்தைக்கு தினமும் தரும் உணவு மற்றும் நீருடன், அதிக திரவங்கள் தரப்படவேண்டியது மிகவும் அவசியம்.
  2. ஒரு மணி நேரத்திற்குள், பல தடவை மலத்தை நீராக கழித்தாலோ, அல்லது மலத்துடன் இரத்தம் காணப்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும். பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரிடமிருந்து உதவி பெறவேண்டும்.
  3. தாய்ப்பாலூட்டுவதால் பேதியின் தீவிரமும், எண்ணிக்கையும் குறையும்
  4. பேதியால் அவதிப்படும் குழந்தை தொடர்ந்து முறையாக சாப்பிட வேண்டும். பேதி சரியான பிறகு, குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது அதிகமான உணவை இரண்டு வாரத்திற்கு சாப்பிட வேண்டும்.
  5. தொடர்ச்சியான அல்லது தீவிர பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு நீர்குறைபாடு ஏற்பட்டால், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட வாய்வழி ரீ-ஹைட்ரேஷன் திரவங்கள் அல்லது மருந்துகள் மட்டுமே தரவேண்டும். மற்ற பேதி மருந்துகள் பொதுவாக வேலை செய்வதில்லை அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.
  6. பேதியை தவிர்க்க, மனித கழிவுகளை கழிவரையில் நீக்கம் செய்ய வேண்டும் அல்லது புதைக்க வேண்டும்.
  7. நல்ல சுகாதார பழக்கவழக்கமுறைகள், பேதியிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது. கைகள் மனித கழிவுகளுடன் தொடர்பு கொண்டால், குறிப்பாக உணவைத் தொடும் முன்பும் அல்லது குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன்பும், சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சாம்பல் மற்றும் தண்ணீர் உபயோகித்து நன்றாக கழுவ வேண்டும்.

வயிற்றுபோக்கு குறித்த உபதகவல்கள்

முக்கிய செய்திகள் 1

பேதியானது, நீரை வெளியேற்றி, நீர்பற்றாகுறை எற்படுத்துவதன்மூலம் குழந்தைகளை உயிரிழக்க செய்கிறது. பேதி தொடங்கியவுடன், குழந்தைக்கு தினமும் தரும் உணவு மற்றும் நீருடன், அதிக நீரும் தரப்படவேண்டியது மிகவும் அவசியம்.

ஒரு குழந்தை நீர் போன்று மலத்தை ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை கழித்தால், அது பேதி என்று அர்த்தம். அதிகமான தடவை பேதி ஏற்பட்டால் அதுமேலும் அபாயகரமானது.

திரவங்கள் குடித்தால் பேதி மேலும் அதிகமாகும் என்று சில மக்கள் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு, பேதி நிற்கும் வரை, குடிப்பதற்கு திரவங்கள் எவ்வளவு தடவை முடியுமோ அந்த அளவு தரவேண்டும். பேதியினால் குறையும் நீரை, நிறைய திரவங்கள் குடிப்பதன்மூலம் ஈடுசெய்யலாம்.

பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு பரிந்துறைக்கப்படும் பானங்கள்:
  • தாய்ப்பால் (தாய்மார்கள் வழக்கதிற்கும் அதிகமான முறை தாய்ப்பால் தரவேண்டும்)
  • சூப்புகள்
  • அரிசி கஞ்சி
  • புதிதாக எடுக்கப்பட்ட பழச்சாறு
  • சிறிது சர்க்கரையுடன் இலேசான டீ
  • இளநீர்
  • பாதுகாப்பான இடத்திலிருந்து எடுக்கப்பட்ட சுத்தமான தண்ணீர். தண்ணீர் சுத்தமாக இல்லை என்ற சந்தேகமிருந்தால், அதை கொதிக்கவைத்தோ அல்லது வடிகட்டியோ சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஓரல் ரீஹைட்ரேஷன் உப்பு (ஓ ஆர் எஸ்), சரியான அளவு சுத்தமான தண்ணீருடன் கலந்தது. (முக்கிய தகவல் ஐந்துக்கு பிறகு வரும் கட்டத்தை பார்க்கவும்)

நீர்பற்றாகுறை ஏற்படாமலிருக்க, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மற்றும் ஒவ்வொரு முறை நீர் போன்ற மலம் வெளியேரும் போதும், குழந்தைகள் கீழ்வரும் திரவங்களை குறிப்பிட்ட அளவுகளில் குடிக்க வேண்டும்.

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு : பெரிய கிண்ணத்தில் கால் மற்றும் அரைக்கு இடைப்பட்ட அளவு.

இரண்டு வயதிற்கு மேற்ப்பட்ட குழந்தைக்கு : பெரிய கிண்ணத்தில் அரை மற்றும் முழு கிண்ணத்திற்கு இடைப்பட்ட அளவு.

சுத்தமான கிண்ணத்திலிருந்து பானங்களை தரவேண்டும். பால் புட்டியை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது. புட்டிகளை முழுமையாக சுத்தம் செய்வது கடினம், மேலும் அசுத்தமான புட்டிகள் பேதிக்கு காரணமாக இருக்கலாம்.

குழந்தை வாந்தி எடுத்தால் உதவியாளர், 10 நிமிடங்கள் காத்திருந்து, மீண்டும் பானங்களை மெதுவாகவும், சிறிய அளவிலும் தரத் தொடங்கவேண்டும்.

பேதி நிற்கும் வரை, உதவியாளர், குழந்தைக்கு, கூடுதலான திரவங்களை வழங்க வேண்டும்.

பொதுவாக பேதி இரண்டு அல்லது மூன்று நாட்களில் நின்று விடும். ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்தால், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரிடம் உதவி கோர வேண்டும்.

முக்கிய செய்திகள் 2

ஒருமணி நேரத்திற்குள், பல முறை மலம் நீராக கழிந்தாலோ, அல்லது மலத்துடன் இரத்தம் காணப்பட்டாலோ, குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும். பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரிடமிருந்து உதவி பெறவேண்டும்.

பெற்றோர்கள், கீழ்கண்டவைகளை தங்கள் குழந்தையிடம் கண்டால், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரிடம் உதவி பெற வேண்டும் :
  • ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் பல முறை தண்ணீர் போன்ற மலம் வெளியேரினால்,
  • மலத்துடன் இரத்தம் வெளியேறினால்,
  • அடிக்கடி வாந்தி எடுத்தால்,
  • காய்ச்சல் இருந்தால்
  • மிகவும் தாகமாக இருந்தால்
  • எதையும் குடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தால்
  • சாப்பிட மறுத்தால்
  • விழிப்படலங்கள் உள்ளடங்கியிருந்தால்
  • சக்தி இழந்து அல்லது சோர்வாக காணப்பட்டால்
  • ஒரு வாரத்திற்கும் மேலாக பேதியால் அவதிபட்டால்

குழந்தைக்கு இவைகளில் ஏதேனும் அறிகுறி இருந்தாலும், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரின் உதவி அவசரமாக தேவை. இதற்கிடையில் குழந்தைக்கு, ஓ ஆர் எஸ் திரவமோ அல்லது மற்ற திரவங்களோ தரப்படவேண்டும்.

குழந்தை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் பல முறை நீருடன் மலம் வெளியேறினாலோ மற்றும் வாந்தியும் இருந்தாலோ, அவை பயப்பட வேண்டிய காரணங்கள் – இவைகள் காலராவின் அறிகுறிகளாக இருக்கலாம். சில மணி நேரத்திற்குள் காலரா குழந்தையை உயிரிழக்க செய்துவிடும். மருத்துவ உதவியை உடனடியாக நாடுங்கள்.

  • காலரா மாசுபட்ட தண்ணீர் அல்லது உணவு மூலம், பொது இடங்களில் விரைவாக பரவலாம். பொதுவாக சுத்தம் குறைவாக இருக்கும் இடங்கள் மற்றும் அதிக கூட்டமான இடங்களிலும் காலரா ஏற்படுகிரது.

காலரா அல்லது பேதி பரவுவதை கட்டுப்படுத்த, நான்கு வழிகள் உள்ளன

  1. எல்லா மனித கழிவுகளையும் கழிவறையில் வெளியேற்றுங்கள் அல்லது புதைத்து விடுங்கள்
  2. மனித கழிவை கைகளால் தொட்ட பின்பு, கைகளை சோப்பு அல்லது சாம்பல் மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
  3. பாதுகாப்பான குடிதண்ணீர் உபயோகிக்க வேண்டும்
  4. எல்லா உணவையும் கழுவி, தோலுரித்து அல்லது சமைக்க வேண்டும்
முக்கிய செய்திகள் 3

தாய்ப்பாலூட்டுவதால் பேதியின் தீவிரமும், எண்ணிக்கையும் குறையலாம்

தாய்ப்பால்தான் பேதியால் அவதிப்படும் சிறு குழந்தைக்கு, சிறந்த உணவு மற்றும் திரவத்திற்கான மூலப்பொருளாகும்.. அது சுத்தமானது, ஊட்டச்சத்து நிறைந்தது, மற்றும் வியாதி அல்லது நோய்தாக்கங்களுக்கு எதிராக போராட உதவுகிறது. தாய்ப்பால் மட்டுமே தரப்படும் குழந்தைக்கு பேதி உண்டாவது மிகவும் குறைவு.

தாய்ப்பால் நீர்பற்றாகுறை மற்றும் ஊட்டச்சத்து குறைபட்டை தவிர்த்து, வெளியேறிய திரவங்களை திரும்ப கிடைக்க உதவுகிறது. குழந்தைக்கு பேதி இருந்தால், குறைவாக தாய்ப்பால் தரும்படி தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது தவறான பரிந்துரையாகும். குழந்தைக்கு பேதி இருந்தால் தாய்மார்கள் வழக்கத்தை விட அதிக முறை தாய்ப்பாலூட்ட வேண்டும்.

முக்கிய செய்திகள் 4

பேதியால் அவதிப்படும் குழந்தை தொடர்ந்து முறையாக சாப்பிட வேண்டும். பேதி, குணம் அடையும் குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளில் ஒரு முறையாவது இரண்டு வாரத்திற்காவது அதிகமாக சாப்பிட வேண்டும்

பேதியால் அவதிப்படும் குழந்தை வேகமாக எடை குறையும், மற்றும் சீக்கிரமாக ஊட்டச்சத்து பற்றாக்குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு அதனால் எவ்வளவு உட்கொள்ள முடியுமோ அந்த அளவு உணவு மற்றும் திரவங்கள் தேவை. உணவு பேதியை நிறுத்த உதவுவதுடன் குழந்தை சீக்கிரமாக குணம் அடையவும் உதவுகிறது.

பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு சாப்பிட பிடிக்காமல் போவதனாலும் அல்லது வாந்தி எடுப்பதனாலும், உணவு ஊட்டுவது கடினமாக இருக்கலாம். ஆறு மாதம் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள குழந்தைகளை, பெற்றோர் மற்றும் கவனித்துக்கொள்வோர், அடிக்கடி சாப்பிடும்படி ஊக்குவிக்க வேண்டும். சிறிய அளவுகளாக, மிருதுவான, மசித்த உணவுகள் அல்லது குழந்தைக்கு பிடித்த உணவுகள் தரப்பட வேண்டும். உணவில் சிறிதளவு உப்பு இருக்க வேண்டும். மிருதுவான உணவுகள் சாப்பிட சுலபமாக இருப்பதுடன், கடினமான உணவை விட திரவம் அதிகமாக இருக்கும்.

பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு, நன்றாக கலந்தத மசித்த தாணியம் மற்றும் பருப்பு, மீன் நன்றாக சமைக்கப்பட்ட மாமிசம். தாணியம் மற்றும் காய்கறிகளில் ஒன்று அல்லது இரண்டு தேக் கரண்டி எண்ணெய் கூட சேர்க்கலாம். புதிதாக உணவை சமைத்து குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு முறை தரவேண்டும்.

பேதி நின்ற உடன், முழுவதுமாக குணமடைய கூடுதல் உணவு மிகவும் முக்கியம். இந்த நேரத்தில், குறைந்த பட்சம் இரண்டு வாரத்திற்காவது குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை கூடுதல் உணவு தரவேண்டும், தினமும் அதிகமாக தாய்ப்பாலூட்ட வேண்டும்

நோய் வரும் முன்பு குழந்தை இருந்த குறைந்த பட்ச எடையை எட்டும் வரை அது பேதியிலிருந்து முழுவதுமாக குணமடையவில்லை என்று அர்த்தம்.

வைட்டமின் – ஏ மாத்திரைகள் மற்றும் வைட்டமின் – ஏ கொண்ட உணவுகள் குழந்தையை பேதியிலிருந்து குணமடைய உதவும். வைட்டமின் – ஏ கொண்ட உணவுகளில், தாய்ப்பால், ஈரல், மீன், பால் சார்ந்த பண்டங்கள், ஆரஞ்ச் அல்லது மஞ்சள் நிற பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் பச்சை கீரைகள் சேரும்.

முக்கிய செய்திகள் 5

தொடர்ச்சியான அல்லது தீவிர பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு நீர்பற்றாக்குறைபாடு ஏற்பட்டால், பயிற்சி பெற்ற சுகாதார ஊழியரால் பரிந்துரைக்கப்பட்ட வாய்வழி ரீ-ஹைட்ரேஷன் திரவங்கள் அல்லது மருந்துகள் மட்டுமே தரவேண்டும். மற்ற பேதி மருந்துகள் பொதுவாக வேலை செய்வதில்லை அல்லது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கலாம்

பேதி பொதுவாக தானாகவே சில நாட்களில் குணமடைந்து விடும். குழந்தையின் உடம்பிலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்து வேளியேருவதனால் ஏற்படக்கூடிய நீர்பற்றாகுறைவும் மற்றும் ஊட்டச்சத்து பற்றாகுறைவும் தான் உண்மையான அபாயம்.

பயிற்சி பெற்ற சுகாதார ஊழியர் பரிந்துரைக்காமல் பேதியால் அவதிப்படும் குழந்தைக்கு எந்த மாத்திரையோ, ஆன்டிபையாடிக்கோ அல்லது வேறு எந்த மருந்துகளோ தரக்கூடாது.

அதிகளவு திரவங்கள் குடிப்பதும் மற்றும் தண்ணீருடன் கலந்த (ஓ ஆர் எஸ்) ரீ-ஹைட்ரேஷன் உப்புகள்தான் பேதிக்கு சிறந்த மருந்து ஆகும்.

ஓ ஆர் எஸ் பொட்டலங்கள் இல்லை என்றால், குழந்தையின் நீர்பற்றாகுறையை, ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரில், நான்கு தேக் கரண்டி சர்க்கரை, மற்றும் ½ தேக் கரண்டி உப்பு கரைத்து குழந்தைக்கு கொடுத்து சரிசெய்யலாம். சரியான அளவு கலப்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும், ஏனெனில், அதிக சர்க்கரை பேதியை அதிகப்படுத்தும், மற்றும் அதிக உப்பு குழந்தைக்கு மிகவும் கேடு விளைவிக்கலாம். கலவையில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது மற்றும் செயல் திறனிலும் குறைந்த பாதிப்பே ஏற்படுத்தும்.

தட்டம்மை அடிக்கடி பேதியை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு தட்டம்மைக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்து கொடுப்பதன்மூலம் பேதியினை தவிர்க்கலாம்.

ஓ ஆர் எஸ் திரவம்- பேதிக்கான ஒரு சிறப்பான பானம்:

ஓ .ஆர். எஸ். என்றால் என்ன?

ஓ ஆர் எஸ் (ஓரல் ரீ-ஹைட்ரேஷன் உப்பு) என்பது பேதியினால் உடல் இழந்த திரவங்களை பாதுகாப்பான தண்ணீருடன் சரியான அளவு கலந்து குடிக்கும் பொழுது உடலின் நீர் பற்றக்குறையை சரி செய்யும் ஒரு சிறப்பான உப்பு ஆகும்.

ஓ ஆர் எஸ் எங்கு கிடைக்கும்?

பெரும்பான்மையான நாடுகளில் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகள் சுகாதார மையங்கள், மருந்துக்கடைகள் மற்றும் கடைகளில் கிடைக்கும்

ஓ ஆர் எஸ் பானத்தை தயாரிக்க:

1. ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை சுத்தமான பாத்திரத்தில் கொட்டவும். பாக்கெட்டில் கொடுக்கப்பட்டுள்ள செயல் விளக்கத்தின் படி சரியான அளவு சுத்தமான தண்ணீர் சேர்க்கவும். மிகக்குறைவான தண்ணீர் பேதியை அதிகப்படுத்தும்.

2. தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும்,பால்,பழச்சாறு,அல்லது மென் பானங்கள் இவற்றுடன் ஓ ஆர் எஸ்யை சேர்க்ககூடாது, சர்க்கரை சேர்க்ககூடாது

3. நன்றாக கலந்து குழந்தைக்கு சுத்தமான கிண்ணத்தில் ஊட்டவும். பால்-பாட்டில் உபயோகிக்ககூடாது.

எவ்வளவு ஓ ஆர் எஸ் பானம் கொடுக்கவேண்டும்?

குழந்தையை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு குடிக்க ஊக்குவிக்க வேண்டும்.

இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு பெரிய கிண்ணத்தில் கால் முதல் அரை கிண்ணம் அளவாவது ஓ ஆர் எஸ் பானம் ஒவ்வொரு பேதி கழிவிற்கு பின்பும் தேவைப்படும்.

இரண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கு பெரிய கிண்ணத்தில் அரை கிண்ணம் முதல் முழு அளவாவது ஓ ஆர் எஸ் பானம் ஒவ்வொரு பேதி கழிவிற்கு பின்பும் தேவைப்படும்.

முக்கிய செய்திகள் 6

பேதியை தவிற்க எல்லா மனித கழிவுகளையும் கழிவறையில் வெளியேற்றுங்கள் அல்லது புதைத்து விடுங்கள்.

குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு வாயின்மூலம் உள்ளே செல்லும் கிருமியே பேதி ஏற்பட காரணமாகும். குறிப்பாக வீட்டு குடிநீர், உணவு, கை, பாத்திரங்கள் அல்லது உணவு தாயாரிக்கும் பகுதியை மனித கழிவுகள் பட்டால் பேதி ஏற்படும். மனித கழிவுகளிலும் உணவிலும் அமரும் ஈக்கள் பேதியை ஏற்படுத்தும் கிருமியை பரப்புகிறது. உணவையையும் குடிநீரையையும் மூடி வைப்பதின் மூலமே ஈக்களிடம் இருந்து பாதுகாக்கலாம்.,.

அனைத்து வகை மலங்களும், ஏன் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் மலங்கள் கூட கிருமிகளை பரப்புவதால் மிகவும் ஆபத்தானவை. சிறுவர்கள் கழிப்பிடம் அல்லது கழிவறையை உபயோகிக்கவில்லை எனில் அவர்களது மலங்கள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு கழிவறையில் போடப்படவோ அல்லது புதைக்கபடவோ வேண்டும். கழிவறை அல்லது கழிப்பிடம் இவற்றை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் கிருமிகள் பரவுவதை தடுக்கலாம்.

கழிவறை அல்லது கழிப்பிட வசதி இல்லாத நிலையில் வீடு, பாதை குடிநீர் வழங்கும் பகுதி, குழந்தைகள் விளையாடும் பகுதி இவற்றில் இருந்து தொலைவில் பெரியவர்களும் குழந்தைகளும் மலம் கழிக்கவேண்டும். மேலும் மலங்களை மண்ணிற்கு அடியில் புதைக்க வேண்டும்.

கழிப்பிடம் அல்லது கழிவறை இல்லாத பகுதியில் அச்சமுதாயத்தினர் இணைந்து அவ்வசதிகளை உருவாக்கலாம். நீர் நிலைகள் மனித கழிவுகளோ அல்லது விலங்கு கழிவுகளோ இன்றி பாதுக்காக்க பட வேண்டும்.

முக்கிய செய்திகள் 7

நல்ல சுகாதார பழக்கவழக்கங்கள் பேதியிலிருந்து பாதுகாக்கிறது.

மனித கழிவை கைகளால் தொட்ட பின்பும் உணவை தொடும் முன்போ அல்லது குழந்தைக்கு ஊட்டும் முன்போ கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சாம்பல் மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.

  • மலம் கழித்த பின்பும் குழந்தையின் பின்புறத்தை சுத்தம் செய்த பின்பும் உணவை தொடும் முன்போ அல்லது குழந்தைக்கு ஊட்டும் முன்போ கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சாம்பல் மற்றும் தண்ணீரால் நன்கு கழுவ வேண்டும்.
  • சிறிய குழந்தைகள் அடிக்கடி தங்கள் கைகளை வாயினுள் வைக்கும். ஆகையால் வீட்டுப்பகுதியை சுத்தமாக வைப்பதுடன் ,குழந்தையின் கையை குறிப்பாக உணவு அளிக்கும் முன்பு அடிக்கடி தண்ணீர் மற்றும் சோப் அல்லது சாம்பல் மற்றும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

பேதியை தடுக்கும் மற்ற சுகாதார முறைகள்

  • சாப்பிடுவதற்கு சற்று முன்புதான் நன்றாக சமைக்கப்பட்டதாகவும் செய்யபட்டதாகவும் உணவு இருக்க வேண்டும். சமைத்து நீண்ட நேரம் வைக்கப்பட்ட உணவில் உள்ள கிருமிகள் பேதியை ஏற்படுத்தும். மிக சூடாகவோ அல்லது மிக குளிர்ச்சியாகவோ வைக்கப்படாத, சமைத்து இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆன உணவு பாதுகாப்பானது அல்ல.
  • அனைத்து கழிவுகளும் புதைக்கப்படவேண்டும். புதைக்கபட்ட அல்லது பாதுகாப்பாக நீக்கப்பட்ட கழிவுகள் ஈக்கள் மூலம் நோய்கள் பரவுவதை தடுக்கிறது.

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate