অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல்

பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற ஒரு தொற்று நோயாகும். பறவைகளின் வயிற்றில் இந்த நுண் கிருமிகள் பொதுவாக காணப்பட்டாலும், சில பறவைகளிடமே அவை வெளித்தெரியும் நோயாக உருவெடுக்கின்றன. வீட்டுப் பறவைகள் அல்லது வியாபார நோக்குடன் வளர்க்கப்படும் பறவைகளிடையே கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிக்காட்டும் வகையிலான தொற்றுநோயாக இந்த நுண் கிருமிகள் பரவுமாயின் அது வேகமாகப் பரவவும் கூடியது.

தீ நுண்மத்தால் பாரிய அளவிலான பறவை / கோழிப்பண்ணைகள் பாதிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் பாரியளவிலான தொற்றுகை ஆசிய பண்ணைகளில் ஏற்பட்டன. கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், லாவோஸ், தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, துருக்கி, கசகஸ்தான், மங்கோலியா, இரசியா, ருமேனியா ஆகிய நாடுகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. 100 மில்லியனிற்கும் மேலான வளர்புப் பறவைகள் இத்தொற்றுகையைக் கட்டுப்படுத்துவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. தீ நுண்மங்கள் இலகுவில் மாற்றமுறக் கூடியன. அதாவது இலகுவில் தமது அடிப்படை இழையுருக்களை மாற்றி வேறுவடிவை எடுக்கின்றன. இவ்வாறு மாற்றமுற்றுப் புதிதாக உருவாகும் தீ நுண்மம்மானது மனிதரிலிருத்து மனிதருக்குப் பரவும் தொற்றாக உருவாகுமானால் விரைவாகவும் கட்டுப்படுத்த முடியாத வகையிலும் பரவும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையாக உள்ளது. வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாக வைத்து ஆராயும் போது ஒரு நூற்றாண்டில் மூன்று அல்லது நான்கு தடவைகள் புதியவகை தீ நுண்மத்தால் உருவாகும் காய்ச்சல் உலகை பாதிக்கின்றன.

காய்ச்சலின் அறிகுறிகள்

உடல் சூடாதல், உடல் பலவீனம், வலி, தொண்டைப் புண், இருமல், கண் எரிச்சல் (Fever, Muscle weakness and/or pain, Sore throat and cough, Sore eyes -conjunctivitis )

இறப்பை ஏற்படுத்தும் காரணிகள்

கடுமையான வைரஸ் நியூமோனியா, சுவாச அழுத்தம், பல அங்கங்கள் செயலிழப்பு (Severe viral pneumonia, Respiratory distress syndrome, Multi- organ failure)

மருந்துகள், தடுப்பூசிகள்

தமிஃபுளு (Tamiflu) எனப்படும் நுண் கிருமிகள் -எதிர் மருந்தே தற்பொழுது பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் தீ நுண்மத்துக்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை வளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன. இம்மருந்தின் உற்பத்திச் செலவு, அனுமதி விதிகள் ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்க முடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன.

உருவாகப் போகும் நுண் கிருமிகள் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. நோய் பாரிய அளவில் பரவுவதற்கு முன்னதாக தடுப்பு மருந்துகளை பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள் பின் நிற்கின்றன.

ஆதாரம் : senthilvayal.com

கடைசியாக மாற்றப்பட்டது : 6/14/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate