சாதாரண காய்ச்சலே மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் டைபாய்டு காய்ச்சலாக இருக்கமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்கிறது.
அந்த அளவுக்கு பரவலாக குறிப்பாக சுகாதாரம் குறைவான நாடுகளில் இந்நோய் காணப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தாக்ககூடியது, சால்மோனெல்லா டைபை(Salmonella typhi) என்னும் பாக்டீரியாவால் இது வருகிறது.
அசுத்தமான குடிநீர், உணவு மூலமாக இந்த கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றன.
முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும்.
1. டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்?
சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக்காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது.
2. இந்நோய் வரக் காரணம்?
'சல்மோனெல்லா டைபி' எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன.
3. நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன?
அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது.
4. ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா?
கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும்.
5. காய்ச்சலின் பாதிப்புகள்?
குழந்தைகளைப் பாதிக்கும்போது, 'காய்ச்சல் வலிப்பு' வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, 'நச்சுக்குருதிநோய்' ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம்.
ஆதாரம் : தமிழ்செய்தி நாளிதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 6/14/2020
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...