பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அதிகம் பேரை பாதிப்பவை தொண்டையில் சதை வளருதல், தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்று நோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது.
இதற்கு டான்சில்ஸ் என்று பெயர். குழந்தைகளின் 12 வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்போதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால் வலி வருகிறது.
தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது. சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள் பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன.
மிதமான சூடுள்ள சோப் நீரில் அல்லது அல்ஹோல் சேர்ந்த ஹானட் நப் கொண்டு கைகளை கழுவவும், குடிக்கும் டம்ளர் அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சகமாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் கிளாசுளை சூடான சோப் நீரில் கழுவ வேண்டும். இருமும் போது உங்கள் வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.
சுத்தமான குடி நீர்
குடி தண்ணீர் மூலம் ஏற்படும் தொண்டை அலர்ஜி நோயை எளிதான முறையில் தடுக்கும் வழி முறைகள்:-
தொண்டையில் சீழ் பிடித்த கட்டி, தொண்டை நோயின் ஒரு அறிகுறி இது, (தொண்டைத் திசுக்களின் உட்பகுதியில் கீழ் சேகரிக்கப்பட்டிருந்தல்) உருவாவதாகும். தொண்டையில் சீழ் பிடித்த கட்டிக்கான அறிகுறிகள் பெரும்பாலும் கடும் காய்ச்சல், அடைத்த குரல், வாயைத் திறப்பதில் சிரமம், உமிழ்நீர் அதிகமாகச் சுரத்தல், வாய்நீர் வடிதல், மற்றும் சில வேளைகளில் கழுத்து வீக்கம் என்பனவாகும்.
இந்த அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரிடம் சென்று காட்டுவது நல்லது. தொண்டை நோய்களில் வேறு சிக்கல்களும் உண்டா கலாம், அப்படிப்பட்ட ஒரு சிக்கல் வாதக் காய்ச்சலாகும். இது தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளை என்பனவற்றை உட்படுத்தும் வாதக் காய்ச்சலாகும். வேறு சிக்கல்கள், மூட்டு வீக்கம் மற்றும் சிறு நீரக வீக்கம் என்பன வற்றை உள்ளடக்கும்.
ஆதாரம்: கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை
கடைசியாக மாற்றப்பட்டது : 7/23/2020
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...