অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மாவட்டச் செயற்குழுக்கள்

மாவட்டச் செயற்குழுக்கள்

நோக்கம்

மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள், மாவட்ட பொதுக்குழுவின் முடிவுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும், பிரிக்கப்பட்ட மாவட்ட அளவில் எழும் அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை மேற்கொள்ளவும், இயக்கத்தை வழிநடத்தவும், அதிகாரம் கொண்ட குழுவே மாவட்ட செயற்குழுவாகும்.

இச்செயற்குழு மூன்று மாதங்களுக்கொருமுறை மாவட்டச் செயலாளரின் தலைமையில், மாவட்ட அமைப்புச் செயலாளரின் முன்னிலையில் கூடும். தேவையையொட்டி, மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரின் அனுமதி பெற்றோ அல்லது மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதன் அடிப்படையிலோ இடைப்பட்டக் காலங்களில் சிறப்புச் செயற்குழு கூட்டப்படும்.

மாவட்டச் செயற்குழுவின் பணிகள்

  • மேலமைப்புகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பொதுக்குழுவின் முடிவுகள் அனைத்தையும் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.
  • இயக்கத்தின் மாவட்ட அளவிலான செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் முதலியவற்றை திறனாய்வுக்கும், கலந்தாய்வுக்கும் ஒவ்வொரு பொதுக்குழுவிலும், செயற்குழு முன்வைக்கும்.
  • மாவட்ட அளவிலான அரசியல் சூழல்கள் மற்றும் இயக்கத் தொடர்பானச் சிக்கல்கள் குறித்து அவ்வப்போது கலந்தாய்வுகள் செய்யவும், முடிவுகள் எடுக்கவும், அம்முடிவுகளினடிப்படையில் இயக்கத்தை வழிநடத்தவுமானப் பணிகளை செயற்குழு செய்யும்.
  • இயக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிற, சட்ட விதிமுறைகளை மீறுகிற மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மீது மாவட்டச் செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதலோடு செயற்குழு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும்.
  • செயற்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையினாலோ அல்லது வேறு காரணங்களாலோ காலியாகும் இடங்களுக்கு உரிய உறுப்பினர்களை செயற்குழுத் தெரிவு செய்யும்.
  • வழக்கமான மாவட்ட செயற்குழுவில், நிதிச் செயலாளர் முன்வைக்கும் வரவு, செலவு அறிக்கைகளை செயற்குழு ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கும்.
  • மாவட்ட அளவிலான அரசியல் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கான செயல் திட்டங்களை செயற்குழு வரையறுக்கும்.
  • இயக்கத்தின் அதிகாரப்பூர்வமான ஏடுகள், ஒலி-ஒளிப்பேழைகள் மற்றும் பிற வெளியீடுகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களிடையே கொள்கைகளைப் பரப்பிடவும், ஆதரவை பெருக்கிடவும் தேவையான செயல்திட்டங்களை மாவட்ட செயற்குழு வரையறுக்கும்.

செயற்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள்

  • மாவட்ட அமைப்புச் செயலாளர்.
  • மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் மற்றும் நிதிச் செயலாளர்.
  • மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்.
  • மாநில அமைப்புக்கான செயற்குழு உறுப்பினர்கள் (மாநிலப் பிரதிநிதிகள்).
  • மாவட்ட அளவிலான அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள்.
  • மாவட்ட அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
  • மாவட்ட அமைப்புச் செயலாளரின் ஒப்புதலோடு மாவட்டச் செயலாளரின் அனுமதி பெற்ற சிறப்பு அழைப்பாளர்கள்.

விதிகள்

மாவட்டச் செயற்குழுவின் விதி 1

மாவட்டச் செயற்குழுவை நடத்துவதற்கு, செயற்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகளை எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

மாவட்டப் செயற்குழுவின் விதி 2

வழக்கமாகக் கூட்டப்படும மாவட்டச் செயற்குழுவினர் கூட்டத்திற்கான அறிவிப்பை ஏழு நாட்களுக்கு முன்னதாகவும், இன்றியமையாதச் சூழல்களில் கூட்டப்படும் மாவட்டச் செயற்குழுவின் கூட்டத்திற்கான அறிவிப்பை மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களுக்கு மாவட்டச் செயலாளர் தெரியப்படுத்த வேண்டும்.

மாவட்டப் செயற்குழுவின் விதி 3

தவிர்க்கமுடியாதக் காரணங்களால் மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அதற்கானத் தகவலை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ மாவட்டச் செயலாளருக்குத் தெரிவிக்க வேண்டும். அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கான விளக்கத்தை மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற ஏழு நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் எழுத்தில் வழங்க வேண்டும்.

மாவட்டப் செயற்குழுவின் விதி 4

  • மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
  • மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் தொடர்ந்து மூன்றுமுறை பங்கேற்காதவர்கள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தகுதியைத் தானாகவே இழந்து விடுவர். அத்துடன் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கான நடைமுறைகளுக்கும் ஆளாவர்.

மாவட்டப் செயற்குழுவின் விதி 5

  • மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாகநிகழ்க்குறிப்பேட்டில்பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்டச் செயற்குழுவில் பங்கேற்போர் கையொப்பமிடும்வருகைப் பதிவேட்டையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்படைக்கும் செயலறிக்கைகளுக்கானகோப்புகளையும்மாவட்டச் செயற்குழுக் கையாள வேண்டும்.

மாவட்டப் செயற்குழுவின் விதி 6

  • மாவட்டச் செயற்குழு கூடும் ஒவ்வொரு முறையும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மாவட்டச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தச் சுருக்க அறிக்கையினை மாவட்டச் செயலாளர் செயற்குழுவின் மீள்பார்வைக்கு முன்வைக்க வேண்டும்.
  • மாவட்டச் செயலாளர் உட்பட மாவட்டச் செயற்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும், வழக்கமாகக் கூட்டப்படும். ஒவ்வொரு மாவட்டச் செயற்குழுவிலும், செயற்குழுவின் இரண்டு கூட்டங்களுக்கு இடைப்பட்டக் காலத்திற்குரியச் செயலறிக்கைகளையும், வரவுசெலவு அறிக்கைகளையும் மாவட்டச் செயற்குழுவில் ஒப்படைக்க வேண்டும். தவறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவர்.
  • தேவையெனில், மாவட்ட அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.
  • தேவையெனில், மாவட்டச் செயலாளர் வட்டார அமைப்புகளின் செயலாளர்கள் மற்றும் அணிகள், துணைநிலை அமைப்புகளின் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டலாம்.
  • மாவட்ட அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், துண்டறிக்கைகள், ஒட்டிகள், ஒலிஒளி நாடாக்கள், செய்தி நறுக்குகள் மற்றும் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாவட்டச் செயலாளர் மாவட்ட அமைப்புச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • மேலமைப்புகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் அரசியல், பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான வரவுசெலவு அறிக்கைகளை தொடர்புடைய பொறுப்பாளர்கள் பதினைந்து நாட்களுக்குள் மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate