பற்களின் நிறம் மாறுதல் (கரைபடிதல்)
காரணங்கள்
- பற்களை நன்கு சுத்தம் செய்யாமல் இருத்தல்
- சில உணவு உட்கொள்ளும் பழக்கங்களால் பற்களை கரைப்படுத்தும்
- புகை பிடித்தல்
- பான் மசாலா சுவைத்தல்
- பல் ஈறுகளில் ஏற்படும் நோய்தொற்றுகள்
- பற்கள் மற்றும் தாடை எலும்புளில் ஏற்படும் முறிவு
- வைட்டமின் சி மற்றும் டி பற்றாக்குறை
- சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை
- குடிக்கும் தண்ணீரில் அதிகளவு ஃப்ளோரின் எனப்படு வேதிப்பொருள் இருத்தல்.
- பற்சொத்தை அல்லது பற்சிதைவு
முன்னெச்சரிக்கைகள்
- ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் - காலை (தூங்கி எழுந்த உடன்) மற்றும் இரவு (படுக்கைக்கு செல்வதற்கு முன்)
- ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாயினை சுத்தமான தண்ணீர் கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.
- சரியான பற்பசையினை (பேஸ்ட்) பயன்படுத்த வேண்டும்.
- சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்.
- புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- வருடத்திற்கு ஒரு முறையாவது, பல்மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments
நட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.
© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.