பொருளாதார அமைப்பைக் குறித்து நாம் முன்னரே விவாதித்தோம் அல்லவா? ஒரு பொருளாதார அமைப்பில் உருவாகும் மாற்றங்களை நீங்கள் கவனித்தி ருக்கிறீர்களா? ஒரு நாட்டின் வேளாண் உற்பத்தி பெருகுகிறது என்பது வெளிப் படையான ஒரு மாற்றமாகும். அதைப் போன்று வேறு மாற்றங்களையும் நம்மால் கண்டறிய இயலும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களைப் பொதுவாகப் பொருளாதார வளர்ச்சி எனக் குறிப்பிடலாம். பொருளாதார வளர்ச்சி (Economic growth) ஒரு பொருளாதார அமைப்பில் பொருட்களுடையவும் சேவைகளுடையவும் உற்பத்தியில் உருவாகும் வளர்ச்சியே பொருளாதார வளர்ச்சி எனப்படுகிறது. பொருட்களுடையவும், சேவைகளுடையவும் அளவு கூடுகிறது என்றால் நாட் டின் தேசிய வருமானம் உயருகிறது என்பது பொருள். சுருக்கமாகக் கூறினால் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியில் கடந்த வருடத்தைக் கணக்கிடும் போது உண்டாகும் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி என்றறியப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கவனியுங்கள். 2013-14 வரு டத்தில் ஒரு வட்டாரத்தில் 100குவிண்டல் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கருதவும். ஆனால் 2014- 15 நிதி ஆண்டில் நெல் உற்பத்தி 110 குவிண்டலாக உயர்ந்தது. முந்தைய ஆண்டைப் பொறுத்துவரையில் 2014-15- இல் 10% உற் பத்தி வளர்ச்சியடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இது பொருளா தார வளர்ச்சியைக் குறிப்பிடுகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் போது மக் களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நாட்டின் திறன் வளருகிறது. பொரு ளாதார வளர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதைக் கீழே கொடுக்கப்பட் டுள்ள சார்ட்டிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
உற்பத்தித்துறையில் மாற்றம் உருவாவதுடன் கூடுதல் வேலைவாய்ப்புகள் நாட்டில் உருவாகும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. அந்த வேலை வாயிலாகக் கிடைக்கும் வருமானம் வேலையாட்களின் வாங்கல் திறனை உயர்த்துகிறது. வேலையில் ஈடுபடுபவர்களின் வாழ்க்கைத் தரம் இதன் வழியாக மேம்படுவதற்கு வாய்ப்புள்ளது.
பொருளாதார வளர்ச்சியைக் குறித்து நாம் புரிந்து கொண்டோம் அல்லவா? பொருளாதார வளர்ச்சி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ற அளவுகோல் இதற்குப் பயன்படுத்தப் படுகிறது. தேசிய வருமானத்தில் ஏற்படும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. முந்தைய ஆண்டை விட நடப்பு ஆண்டில் தேசிய வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் விகிதம் பொருளாதார வளர்ச்சி விகிதம் எனப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி என்ன என்பதைப் புரிந்துகொண்டீர்கள் அல்லவா? பொரு ளாதார வளர்ச்சி உருவாவதால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட் டுள்ளது எனக் கூற இயலாது. வாழ்கைத் தரம் மேம்பட வேண்டுமெனில் தேசி ய வருமானத்துடன் வேறு ஏராளமான வாழ்க்கைச் சூழல்களும் கிடைக்க வேண் டும். அத்தகையச் சூழல்கள் எவையென்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
இத்தகைய மேம்பட்ட வாழ்க்கைச் சூழல்கள் அனைவருக்கும் கிடைக்கும் போது ஒரு நாட்டிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறது. பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரமும் உயரும் போது பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. நாடு பொருளாதார வளர்ச்சி அடையவும், நாட்டிலுள்ள அனைவ ருக்கும் அதன் பலனை அனுபவிக்கவும் இயலும் போது அந்த நாடு முன் னேற்றம் அடைந்துள்ளது எனக் கூறலாம். பொருளாதார முன்னேற்றம் = பொருளாதார வளர்ச்சி + வாழ்க்கைத் தரத்திலுள்ள உயர்வு பொருளாதார வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் - 5 தொடர்புடைய சில கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் - - பொருளாதார வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என வகைப்படுத்தலாம். –
உலக நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகள் எனவும் வளரும் நாடுகள் எனவும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. எதன் அடிப்படையில் இவ்வகைப்பாடு நடத்தப்படுகிறது? ஒரு நாடு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை எவ்வாறு கணக்கிடலாம்? பொருளாதார முன்னேற்றம் கணக்கிடுவதற்கும் மதிப்பிடுவதற்கும் பொதுவாக அங்கீகரிக்கப்பட் டுள்ள சில குறியீடுகள் உள்ளன. முக்கியமான முன்னேற்றக் குறியீடுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படத்திலிருந்து கண்டுபிடிப்போம்.
முன்னேற்றக் குறியீடுகளில் மிக எளிமையானதும் தொடக்கக் காலத்தில் முன் னுரிமை வழங்கி கணக்கிடப்பட்டிருந்ததும் தனிநபர் வருமானமாகும். இது ஒரு பரம்பரை முன்னேற்றக் குறியீடாகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகை யால் வகுத்தால் கிடைக்கும் வருமானம் தனிநபர் வருமானம் எனப்படும். இந்தக் குறியீட்டின் படி ஒரு நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளதா? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு இரண்டு செயல்களை உற்றுநோக்க வேண்டும்.
தேசிய வருமானத்தின் வளர்ச்சி விகிதம்
மக்கட் தொகை வளர்ச்சி விகிதத்தை விடக் கூடினால் மட்டுமே தனிநபர் வருமானம் அதிகரிக்க முடியும் தனிநபர் வருமானத்தின் உயர்வு முன்னேற்றத்தின் ஒரு குறியீடாகும். ஒரு நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியை முந்தைய வருடங்களோடு ஒப்பிடவும், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடவும் தனிநபர் வருமானம் பயன்படுகிறது ஒரு முன்னேற்றக் குறியீடு என்ற நிலையில் தனிநபர் வருமானத்திற்கு ஏராள மான குறைபாடுகள் (Limitations) உண்டு
தனிநபர் வருமானம் ஒரு சராசரி வருமானமாகும். எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் மொத்த வருமானம் 40,000 ரூபாய் எனக் கருதவும். இதன் பொருள் ஒரு நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருடையவும் கையில் இவ்வளவு வருமா னம் கிடைக்கிறது என்று அல்ல. கோடி வருமானம் உடையவர்களும் வரு மானம் மிகக் குறைந்தவர்களும் இதில் உட்படுவர். எனவே இது வெறும் எண்ணிக்கையளவிலான கணக்கிடுதல் மட்டுமாகும். தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் பொருளாதார முன்னேற்றம் கணக் கிடும் போது ஏழை- பணக்காரப் பிரிவுகள் நிலைநிற்பதாக இருந்தால் வாழ்க் கைத் தரம் பெற்றுள்ளது எனக்கூற இயலாது. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் காரணிகளான கல்வி, சத்துணவு வசதி உடல்நலப்பாதுகாப்பு போன்றவை தனிநபர் வருமானம் என்ற முன்னேற்றக் குறியீட்டின் எல்லைக்குள் உட்படுவதில்லை. பொருளாதார வளர்ச்சிக்கு மேலாக, அதன் சரியான பங்கீடும். அதன் வழியாக ஏற்படுகின்ற சமூகநலனும் இந்த முன்னேற்றக் குறியீடு கணக் கிடுவதில்லை .
ஒரு முன்னேற்றக் குறியீடு என்ற நிலையில் தனிநபர் வருமானத்தை விட மேலாக அறிவியல் சார்ந்த தவிர்க்க இயலாத ஒரு குறியீடு உயர்ந்து வந்தது. அதன் விளைவாக 1979- இல் பௌதீக வாழ்க்கைத்தரக் குறியீடு நடைமுறைக்கு வந்தது. தனிநபர் வருமானம் என்ற ஒரே நிபந்தனைக்குப் பதிலாகப் பௌதீக வாழ்க்கைத் தரக்குறியீடு பிற மூன்று காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அவை கீழே கூறப்பட்டுள்ளவையாகும்.
எதிர்பார்க்கும் ஆயுட்காலம்
குழந்தை இறப்பு விகிதம்
அடிப்படை எழுத்தறிவு பௌதீக வாழ்க்கைத் தரக் குறியீடு பொருளாதார முன்னேற்றத்தை வேறுபட்ட கண்ணோட்டத்தில் உற்றுநோக்குகிறது.
எடுத்துக்காட்டாக
சிகிச்சை வசதிகள் கூடும் போது வாழ்க்கைத் தரமும் பொருளாதார முன் னேற்றமும் ஏற்படுகிறது. புதிய கல்வி வசதிகள் வரும் போது கல்வியின் தரமும் வாழ்க்கைத் தரமும் மேம்படுகிறது. தனிநபர் வருமானத்தை விடச் சிறந்த முன்னேற்றக் குறியீடு பௌதீக வாழ்க் கைத் தரக் குறியீடாக இருந்தாலும் இது தனிநபர் வருமானத்தைப் புறக்கணிக்கி றது என்பது அதன் முக்கிய குறைபாடாகும்.
மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index)
மனிதவள மேம்பாட்டைக் நிபந்தனையாக்கியுள்ள பொருளாதார முன்னேற்றம் இதுவாகும். ஐக்கிய நாட்டு முன்னேற்றச் சபை (U.N.D.P) மனிதவள மேம்பாடு என்ற கருத்தைக் குறித்துக் கூறியுள்ளதைக் கவனியுங்கள்: “மனிதவளம் மேம்படுவதற்கு மக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை விரிவுப் டுத்தும் செயல்பாடுதான் மனிதவள மேம்பாடு.” மனிதவள மேம்பாட்டிற்கு துணைநிற்கும் ஏராளம் காரணிகள் உண்டு. சில எடுத் துக்காட்டுகளைப் பாருங்கள்.
கூடுதல் பயிற்சி மேற் குறிப்பிட்டுள்ளவை எல்லாம் மனிதவள மேம்பாட்டிற்குத் வழி நடத்துபவை யாகும். இனி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதவள மேம்பாடு உருவானால் அது பொருளாதார முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவும் என்பதாகும்: ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆயுட் காலம் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் மதிப்பு பூஜ்யத்துக்கும் ஒன்றுக்கும் இடையிலாகும். பூஜ்யம் என்பது சிறிதளவும் முன்னேற்றமின்மையைக் குறிப்பி டும் போது ஒன்று மிக உயர்ந்த முன்னேற்றத்தைக் குறிப்பிடுகிறது. குறியீட்டின் மதிப்பின் அடிப்படயில் உலக நாடுகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைக் கவனியுங்கள். - H.D.I. மதிப்பு - பிரிவு 0.8 முதல் 1.0 வரை
உயர்ந்த மனிதவள மேம்பாடு (0.5 முதல் 0.79 வரை இடைநிலை மனிதவள மேம்பாடு
0.49 -ம் அதற்கு குறைவும் தாழ்ந்த மனிதவள மேம்பாடு . ஐக்கிய நாட்டு முன்னேற்றத் திட்டம் (UNDP) தான் இவ்வாறு உலகநாடுகளை வகைப்படுத்தி அட்டவணை தயாரித்து வெளியிடுகிறது. 1990 முதல் ஒவ்வொரு ஆண்டும் UNDP மனிதவள மேம்பாட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் எதிர்மறையாக ஐக்கிய நாட்டுச் சபை உரு வாக்கிய மற்றொரு குறியீடே மனித வறுமைக் குறியீடு. 1997- இல் இதன் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது. மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மனித வறுமைக் குறியீடு தயாரிக்கப்படுகிறது. நீண்டதும் உடல்நலம் நிறைந்தது மான வாழ்க்கை , அறிவு மற்றும் தரமான வாழ்க்கை ஆகியனவாகும்.
மகிழ்ச்சிக் குறியீடு (Happiness Index)
மேற்குறிப்பிட்ட முன்னேற்றக் குறியீடுகளுடன் ஐக்கிய நாட்டு சபை அங்கீ காரம் அளித்த புதிய ஒரு முன்னேற்றக் குறியீடு ஆகும் மகிழ்ச்சிக் குறியீடு. பூட்டான் உருவாக்கிய இந்த குறியீட்டிற்கு ஐக்கிய நாட்டு சபை அங்கீகாரம் அளித்தது. ஒன்பது குறியீடுகள் மகிழ்ச்சிக் குறியீடு கண்டுபிடிப்பதற்குக் கணக்கிடப்படுகிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஆரோக்கியம் வாழ்க்கைத் தரம் இயற்கையினுடையவும் பல்வகை உயிரினங்களுடையவும் பாதுகாப்பு சமூக வாழ்க்கையும் அயல்வீட்டினர் தொடர்பும் ஊழலற்ற ஆட்சி பண்பாட்டு வேற்றுமை கல்வி நேரத்தின் சரியான பயன்பாடு மனநலம் 2015 -இன் மகிழ்ச்சிக்குறியீட்டிற்கேற்ப உலக நாடுகளுக்கிடையே இந்தியாவின் இடம் 117 ஆகும். ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.
இந்தியாவில் முன்னேற்றம் எதிர்கொள்ளும் சவால்கள் இந்தியாவின் மேம்பாட்டிற்கு ஏராளமான அளவுகோல்கள் உள்ளன. எனினும் பல அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் முக்கியமா னது வறுமை (Poverty). திட்டக்கமிஷனுக்காக ரெங்கராஜன் குழு தயாரித்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2011 - 12 இல் 29.5% மக்கள் வறுமையில் வாழ்பவர்கள் ஆகும். வறுமயைத் தவிர எழுத்தறிவின்மை , சத்துணவுக் குறை பாடு கொடிய பொருளாதார நெருக்கடி, பட்டினி மரணம், வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நிலைநிற்கிறது.
வேலையில்லை என்பது இந்தியா எதிர் கொள்ளும் ஒரு முக்கிய முன்னேற்றப் - வறுமை இந்தியாவில் பிரச்சினையாகும். கடந்த 20 ஆண்டு இந்தியாவில் வறுமையைக் கணக்கிடுவது கலோரி களுக்கு மேலாக பார்க்கக் கூடிய ஒன்று யின்(Calorie intake) அடிப்படையிலாகும். யார் ஏழை? நமது பொருளாதார வளர்ச்சி 8- 9 சதவீ கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 2400 கலோரி சக் தமாக இருந்தாலும் வேலைவாய்ப்பின் தியை உடலுக்கு வழங்க இயலும் உணவு கிடைப்ப (Employment) வளர்ச்சி விகிதம் ஒரு சததற்கான வருமானம் இல்லாவிட்டால் ஒரு நபர் வறுமை வீதம் அல்லது அதற்கு குறைவானதா யிலாகும். நகர்புறங்களில் இது 2100 கலோரியாகும்.
பொருளாதார வளர்ச்சி புதிய தியாவில் உத்திரப்பிரதேசம், பீகார், உத்ரகாண்ட், சத்தீஸ் வேலைவாய்ப்புகளை உருவாக்குவ கட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 35 சதவீதத்திற்கு அதி தில்லை என்பதே இதன் பொருள். கமான மக்கள் வறுமையிலாகும். நமது முன்னேற்றம் எதிர்கொள்ளும் வேறொரு பிரச்சினை சமத்துவமின்மை (Inequality). சமத்துவமின்மை மூன்று முறைகளிலுள்ளது
நிலப்பகுதிகளுக்கிடையே உள்ள சமத்துவமின்மை இந்த மூன்று வகையிலான சமத்துவமின்மைகளும் இந்தியாவில் அதிகமாக நிலவி வருகிறது.
நாட்டின் மொத்த சொத்திலும் நாட்டில் கிடைக்கும் வருமானத் திலும் மக்களுக்குள்ள பங்கின் அடிப்படையில் முறையே சொத்திலுள்ள சமத் துவமின்மையும் வருமானத்திலுள்ள சமத்துவமின்மையும் கணக்கிடப்படுகிறது. மூன்றாவதாக நாம் குறிப்பிட்ட சமத்துவமின்மை நிலப்பகுதிகளுக்கிடையிலான சமத்துவமின்மையாகும். எடுத்துக்காட்டாக பெரிய நகரங்களில் பெரும்பான்மை யான மக்களுக்கும் வேலை. நல்ல மருத்துவமனைகள், சாலை, குடிநீர் வசதி, பயணவசதி, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ஆகியவை உள்ளன. ஆனால் பீகார், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலுள்ள சில கிராமங்களில் இத்த கைய வசதிகள் ஒன்றுமில்லை. அங்கே பட்டினி மரணம், வேலையின்மை, சாலை மற்றும். செய்தித் தொடர்பு வசதிகளின் குறைபாடு ஆகியவை நிலை நிற்கிறது. இவ்விதம் சில பகுதிகள் வளர்ச்சியில் முன்னணியிலும் சில பகுதிகள் மிகவும் பின்னோக்க நிலையிலும் நிற்கும் நிலை காணப்படுகிறது.
இது வட்டாரச் சமத்துவமின்மை என்பதன் பொருளாகும். நிலையான முன்னேற்றம் (Sustainable Development) எந்த ஒரு பொருளாதார அமைப்பினுடையவும் முக்கிய இலக்கு என்பது பொரு ளாதார முன்னேற்றம் என்பதைப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? பொருளா தார முன்னேற்றம் வாயிலாக ஏராளமான மாற்றங்கள் நம்மைச் சுற்றி நிகழ்கிறது.
எடுத்துக்காட்டாக,
இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்க்கையின் தரமும் நாடுகளின் பொருளாதார நிலையும் மேம்படுத்தும் என் பதில் ஐயமில்லை . ஆனால் மனிதனின் கட்டுப்படுத்த முடியாத ஆவல் அடங்குவதில்லை . அது வளங் களை அதிகமாகச் சுரண்டுவதற்கும் இயற்கையை அழிப்பதற்கும் நேராக மனிதனைக் கொண்டு செல் கிறது. நகரமயமாக்குதல், வேளாண்மையில் வியாப் ராமயமாக்குதல் ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் சில மாற்றங்களின் படங்களைக் கவனியுங்கள்.
இயற்கையில் என்னென்ன விளைவுகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும். அதி கமாக கருத்துகளைச் சேர்க்கவும். அளவுக்கு அதிகமான பொருளாதார வளர்ச்சியை இலக்காக வைத்து மனிதன் செய்யும் செயல்பாடு கள் பலவேளைகளில் இயற்கை வளங்களின் சுரண் டல்களுக்கும், இயற்கை அழிவிற்கும் காரணமா கிறது. நமது நாட்டில் அன்றாடம் உயர்ந்து வரும் கட் டிடங்களுக்கும். சாலைகளுக்குமாக பாறைகளும் , குன்றுகளும் அளவுக்கதிகமாக இடிக்கப்படும் போது அது மனிதனின் வாழ்க்கைக்கும் வட்டார காலநிலை மாற்றத்திற்கும் கேடு விளைவிக்க ஏதுவாகிறது. இத்தகைய பிரச்சினைகள் நாட் டின் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதாக இருந்தாலும் ஒரு பிரிவு மக்களின் வாழ்க்கையில் அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது. நமக்குத் தேவை, மனிதநேயமுள்ளதும் இயற்கைக்குக் கேடுவிளைவிக் காததுமான ஒரு வளர்ச்சி அணுகு முறையாகும், அல்லது நிலையான வளர்ச்சியாகும். ஐக்கிய நாட்டுச்சபை நியமித்த பிரண்ட்லாண்ட் குழு நிலையான முன்னேற் றத்தை இவ்வாறு வரையறுத்துள்ளது: “வருங்காலத் தலைமுறைக்கு அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனில் தடைவராமல். இன்றைய தலைமுறை அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் அணுகுமுறையே நிலையான முன்னேற்றம்.”
இயற்கைவளங்களைப் பயன்படுத்துவதில் சமூக நீதியை உறுதிப்படுத்தும் கண்ணோட்டமே இது. இயற்கைவளங்கள் ஒரு தலைமுறையினருக்கு மட்டும் அனுபவிக்க வேண்டி யது அல்ல வருங்கால தலைமுறையினருக்கும் உரிமையானது என்ற கண்ணோட் டம் தான் நிலையான முன்னேற்றத்தின் உட்கருத்து.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை விரிவுபடுத்துங்கள்.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் நிலையான முன்னேற்றத்திற்கு தடையானவை களாகும். இயற்கை வளங்களை வரும் தலைமுறையினருக்கும் கிடைக்கச் செய் யும் வகையில் பொருளாதார முன்னேற்றம் நிலையான முன்னேற்றம் ஆகிய வற்றைச் செயல்படுத்த வேண்டிய அறிவுரைகளை முன்வைப்பீர்களல்லவா?
பொருளாதார வளர்ச்சியினுடையவும் முன்னேற்றத்தினுடையவும் சிறப் புகளை எடுத்துரைக்கின்றனர். முன்னேற்றக் குறியீடுகளின் விளக்கப்படம் தயாரித்து வெளியிடு கின்றனர் பௌதீக தரம் வாய்ந்த குறியீடுகளின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றனர் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளின் சிறப்புகளைக் கண்டுபிடித்து வெளியிடுகின்றனர்.
ஆதாரம் : தமிழ்நாடு கல்வியில் ஆராய்ச்சி மையம்
கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020