অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

ஸ்மார்ட் நகரங்களில் டிஜிட்டல் நிர்வாகம்

ஸ்மார்ட் நகரங்களில் டிஜிட்டல் நிர்வாகம்

அறிமுகம்

2050 ஆம் ஆண்டிற்குள் உலகின் வளரும் நாடுகளில் உள்ள மக்களில் 64 விழுக்காட்டினர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை 86 விழுக்காடாக இருக்கும் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதிவேக நகர்ப்புறமயமாக்கலின் காரணமாக மாநகரங்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மாநகரங்களை ஸ்மார்ட் ஆக மாற்ற வேண்டியதன் அவசியமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஸ்மார்ட் நகரத் திட்டத்தின்படி மேற் கொள்ளப்படும் பல்வேறு முன் முயற்சிகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். ஏனெனில், ஸ்மார்ட் நகரங்களுக்கு குறிப்பிட்ட தேவைகள் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு பணிகளை வரிசைப்படுத்த வேண்டும். அடுத்தக்கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதும், ஸ்மார்ட் நகரங்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை தீர்மானிப்பதும் மிகவும் அவசியமாகும். மாநகர நிர்வாகமும், சவால்களும் அதைச் சார்ந்த குடிமக்களுக்கு சேவைகளை வழங்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவுகின்றன. இத்தகைய சேவைகள் ஏராளமானவை; பலவகையானவை ஆகும். இந்த சேவைகளை வழங்குவதில் பல்வேறு தரப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதால் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் சேவைகளை வழங்குவதில் பல்வேறு அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பும், நிர்வாக அமைப்பும் தேவைப்படுகிறது.

  • சூழல் அமைப்புகள்
  • மாநகர நிர்வாகம்,
  • இயக்குதல் மற்றும் பாராமரித்தல்,
  • பொதுக்கட்டமைப்பு சொத்து மேலாண்மை,
  • ஒருங்கிணைந்த செயல்பாடுகள்,
  • குடிமக்கள் மேலாண்மை

ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. டிஜிட்டல் முறையில் நடைபெற வேண்டிய பணிகளை மனிதர்கள் மூலம் செய்யும் போது திறமையின்மை, முழுமையான பயன்பாடின்மை, முறைகேடுகள் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய ஸ்மார்ட் நகரங்களை இன்னும் சிறப்பாக நிர்வகிக்கவும், உண்மையான உலகத்தரம் கொண்டதாக மாற்றவும் தொழில்நுட்பத்தை எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை அறிவதற்கு சிறிது நேரத்தை துக்குவோம். மாநகர நிர்வாகத்தை சாதாரண கண்ணாடி வழியாக பார்த்தால் நிறுவனம் சார்ந்த பணிகள் முழுமையடையாமலும், ஒரே வேலை இருமுறை செய்யப்படுவதையும் பார்க்க முடியும். உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி நெருக்கடி, போதிய தன்னாட்சி இல்லாமை, குடி மக்களுடன் போதிய தொடர்பு இல்லாமை ஆகியவற்றையும் நம்மால் காண முடியும். அதேபோல், வளங்களை சிறப்பாக பயன்படுத்தும் செயல்களின் மூலம் பணியாளர்கள் மேலாண்மையை சிறப்பாக செய்ய முடியும். மனிதக் குறுக்கீடுகளைக் குறைக்க தானியங்கி மயமாக்கப்பட்ட வணிக நடைமுறைகளை பயன்படுத்தலாம். இவை தவிர, பொதுமக்களை அரசு தொடர்பு கொண்டு அவர்களிடம் யோசனைகளைக் கோரவும், கருத்துக்களை அறியவும் குடிமக்கள் சார்ந்த ஆன்லைன் இணையதளங்கள் உதவுகின்றன.

தொழிற்நுட்ப முறைகள்

இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அணுகுமுறை எப்போதுமே தற்காலிகமான ஒன்றாகவே இருக்கிறது. இதில் சேவை வழங்குபவரின் செயல்பாடுகள் தெளிவாக இருக்காது. மாநகர மேலாண்மை அணுகுமுறை ஒருங்கிணைக்கப் படாததாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஆட்கள் பற்றாக்குறை தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். சுருக்கமாக கூறினால், இத்தகைய செயல்பாடுகள் பெருமளவில் எதிர்வினைகளை உருவாக்கும்; இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இந்த நிலையை மாற்றி இயக்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கவும், சேவை வழங்கலின் தரம் குறைவாக இருந்தால் அது குறித்து குடிமக்கள் விளக்கம் கேட்கவும் City performance dashboard என்ற தொழில்நுட்ப முறை வகை செய்கிறது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் செயல்பாட்டு மையத்தின் உதவியுடன் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க முடியும். பராமரிப்பு பணிகள் நடைபெறும் கால சுழற்சி முறையை புரிந்து உதவும். அதுமட்டுமின்றி, சிறப்பான செயல்பாட்டையும் இது ஊக்குவிக்கும்.

பொது கட்டமைப்பு மற்றும் சொத்துக்களுக்கான சிறப்பான திட்டமிடலுக்கு எந்த வசதியும் இல்லை. மாநகர நிர்வாகத்தில் உள்ள பொருட்களின் இருப்புகள் தொடர்பான கணக்கு வழக்குகள் இன்னும் பழங்கால முறையில் தான் கையாளப்படுகின்றன. இந்த பதிவேடுகள் அனைத்தும் கைகளால் தான் எழுதப்படுகின்றன. இதனால் சொத்து மேலாண்மை உத்தி விரிவானதாக இல்லை. ஒருங்கிணைந்த மேலாண்மை தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் சொத்து மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்த முடியும்; என்னென்ன சொத்துக்கள் உள்ளன என்பதையும், அவற்றின் பராமரிப்பையும் பார்க்க முடியும். இதனால் சொத்து மேலாண்மைக்கான செலவுகளை பெருமளவில் குறைக்க முடியும். செல்பேசிகள், இணையதளங்கள், நேருக்கு நேர் சந்திப்பு, கியோஸ்க், சமூக ஊடகம் போன்ற பல்முனை குடிமக்கள் சந்திப்பு முனையங்கள் மூலம் சேவைகளுக்கு பணம் செலுத்துதல், வரி செலுத்துதல், ஆன்லைனில் சான்றிதழ் வழங்குதல், குறைகளை பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்க முடியும். சமூக இருவழி தகவல் தொடர்பு கருவி என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஊடகங்கள் சக்திவாய்ந்த தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தீர்வுகளின் உதவிகளுடனான மாநகர நிர்வாகம் வணிக நடைமுறை தானியங்கி நடைமுறை மேலாண்மையைப் பயன்படுத்தி வணிக நடைமுறையை மறுஉருவாக்கம் செய்தல், மேம்படுத்துதல், தானியங்கி மயமாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் முற்றிலுமாக ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் கொள்கை அடிப்படையில் செயல்படக் கூடிய தானியங்கிமயமாக்கப்பட்ட வணிக நடைமுறையை உருவாக்க முடியும். இது செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதுடன் சேவை வழங்குவதற்கான செலவையும் குறைக்கிறது.

பல்முனை முனையங்கள்

  • செல்பேசி
  • இணையதளம்
  • ஆன் லைன்
  • தொலைபேசி
  • நேருக்கு நேர் சந்திப்பு
  • கியோஸ்க்
  • சமூக ஊடகங்கள்

பல்முனை குடிமக்கள் சேவை முனையங்கள் மூலம் கட்டணம் செலுத்துதல்

  • வரி செலுத்துதல்
  • பிறப்பு சான்றிதழ் பெறுதல்
  • குறைகளை பதிவு செய்தல்

உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும். City performance dash board மாநகர அமைப்புகளின் செயல்பாடுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கலாம்.

ஸ்மார்ட் மாநகர நிர்வாகம் மற்றும் செயல்பாடு

ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை தீர்வு

அனைத்து அரசு கட்டமைப்பு சொத்துக்களை மேலாண்மை செய்ய ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை தீர்வு உதவுகிறது. சொத்து தொடர்பான தகவல்கள் நடைமுறைகள் தகவல் அமைப்புகள், மேலாண்மை செய்வதற்கேற்ற செயல்பாடுகளுக்கான நிர்வாகம், நீடித்த தன்மை ஆகியவையும் இதில் அடங்கும்.

மாநகர சேவைகளை அந்த நேரத்திலேயே கண்காணிப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் செயல்பாட்டு மையங்கள் உதவுகின்றன. எந்தவொரு பணியையும் செய்வதற்கான நேரத்தை குறைத்தல், பராமரிப்பு தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான பராமரிப்பு பணிகளை தரம் உயர்த்த இந்த மையம் உதவியாக உள்ளது.

பல்முனை குடிமக்கள் தொடர்பு

குடிமக்களின் வேண்டுகோள்கள் மற்றும் பிரச்சினைகளை நேருக்கு நேராகவும், இணையதளம், செல்பேசி, கியோஸ்க் ஆகியவற்றின் வழியாக பதிவு செய்ய சேவை மையம் / தொடர்பு மையம், குடிமக்கள் சேவைகள் இணையதளம் உள்ளிட்ட பல்முனை வாடிக்கையாளர் சேவை முனையங்கள் உதவுகின்றன.

பணியாளர்கள் மற்றும் வளங்கள் மேலாண்மை தீர்வு

  • பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துதல்,
  • பணிகளை மேலாண்மை செய்தல்

ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பணியாளர்கள் மற்றும் வளங்கள் மேலாண்மை தீர்வு உதவுகிறது.

  • திட்டமிடல்,
  • முன்கூட்டியே கணித்தல் மற்றும் அட்டவணை தயாரித்தல்,
  • பணி முறை மேலாண்மை,
  • பணிகளை செயல்படுத்துவதற்கான செல்பேசி செயலிகள்,
  • சிறப்பான மேலாண்மை செயல்பாட்டு கருவிகள்

ஆகிய பணியாளர் மேலாண்மை தீர்வுகளின் உதவியுடன் பணியாளர்களின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.  நடைமுறையில் உள்ள தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழிற்நுட்ப முதலீடுகள் மற்றும் அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படக்கூடிய முன் முயற்சிகள் தேசிய சேவை விநியோக உட்கட்டமைப்பு தரங்களின் அடிப்படையிலான செயல்பாடுகளை எட்டுவதற்கான மைய உட்கட்டமைப்பு வசதியாக இது செயல்படுகிறது.

அரசுக்கு சொந்தமான சேவை வளங்கள் நுழைவாயிலை இது உருவாக்கும். பல்வேறு மின் நிர்வாக செயலிகளுக்கு இடையிலான தகவல் அனுப்புதல் மற்றும் சார்பு செயல்பாடுகளை உறுதி செய்தல், முன்-முனை சேவை வழங்குவோரிடமிருந்து பின்-முனை சேவை வழங்குவோரை பிரித்தல் ஆகியவற்றுக்கு இது உதவும். பணம் செலுத்தும் சேவைகள், செல்பேசி நுழைவாயில் சேவைகள் போன்ற துறை சார்ந்த பயன்பாடுகளுக்கான சேவை மையமாகவும் இந்த கட்டமைப்பு விளங்கும்.

ஆதார் வசிப்பாளர்களின் விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பதற்கான வலிமையான தளத்தை வழங்குகிறது. குடிமக்களின் டிமோகிராபிக் மற்றும் உடற்கூறு விவரங்கள் மைய தகவல் தொகுப்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றுடன் வசிப்பாளர்களின் விவரங்களை ஒப்பீடு செய்ய முடியும். போலியான பதிவுகளை தவிர்க்கும் நோக்குடன் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்துவ அடையாள எண் வழங்குவதுதான் ஆதார் திட்டத்தின் நோக்கமாகும்.

மொபைல் சேவை வழங்கல் நுழைவாயில்  தகவல் தொழில்நுட்ப புரட்சியின் அடுத்த நிலைகளில் ஒன்று மொபைல் நிர்வாகமாகும். பொதுத் தகவல்கள் மற்றும் சேவைகளை அனைத்து குடிமக்களுக்கும் வழங்குவதற்காக மொபைல் கருவிகள் மற்றும் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய தள சேவையை விட மொபைல் செல்பேசி சேவைகள் ஊரக பகுதிகளில் வேகமாக நுழைந்திருப்பதால் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உள்ளடக்கிய வளர்ச்சியின் சக்தியை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதுதான் ஒட்டுமொத்த உத்தியாகும்.

தேசிய மேகம் முன்முயற்சி

மத்திய அரசின் மூலம் மேகராஜ் என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கேட்டவுடன் கிடைக்கும் உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் பயன்பாடுகளை சேமித்து வைக்கும் தொகுப்பாக இது செயல்படும். தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்பட்ட வகையில் பயன்படுத்துதல். மின் நிர்வாக செயலிகளை விரைவாக உருவாக்கி பயன்பாட்டுக்கு அனுப்புதல், வெற்றிகரமான செயலிகளை அதிக அளவில் உருவாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும். மாநில தகவல் மையம் அரசின் பல்வேறு சேவைகளை மின்னணு முறையில் வழங்குவதற்கான கட்டமைப்புகள், பயன்பாடுகள், சேவைகள் ஆகியவற்றை மாநில அரசுகள் ஒருங்கிணைப்பதற்கு வசதியாக மாநில தகவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸ்வான் (StateWide-Area-Network-SWAN) அளவிலான தகவல் கட்டமைப்பு, கிராமங்கள் வரை அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. பொது சேவை மையங்கள் மின்னணு நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தொலை மருத்துவ ஆலோசனை , பொழுதுபோக்கு மற்றும் பிற தனியார் சேவை தொடர்பான உயர்தரமான வீடியோக்கள், குரல் பதிவு மற்றும் தகவல் தொகுப்புகளை வழங்குவதற்கு பொது சேவை மையங்கள் உதவுகின்றன. விண்ணப்பப்படிவங்கள், சான்றிதழ்கள் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கும், மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை செலுத்தவும் இவை வசதியாக உள்ளன.

தேசிய மின்னணு நிர்வாகத்தின் நோக்கம்

மாநில இணையதளம் மற்றும் மாநில சேவை வழங்கல் நுழைவாயில் அனைத்து அரசு சேவைகளையும் சாதாரண குடிமக்கள் அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பொதுச்சேவை மையங்கள் மூலம் பெற வசதி செய்து தரப்பட வேண்டும்; இது மிகவும் வெளிப்படையானதாகவும், திறமையானதாகவும், நம்பத் தகுந்ததாகவும் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்; இவை அனைத்தும் கட்டுபடியாகும் விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தேசிய மின்னணு நிர்வாகத்தின் நோக்கம் ஆகும்.

அரசின் பயன்பாட்டு சேவைகள் அதிகம் பேரை சென்றடைய வசதியாக, எளிதில் விரிவுப்படுத்தக்கூடிய, ஒருங்கிணைக்கக்கூடிய, சேவைத் திறனை அதிகரிக்கக் கூடிய ஒருங்கிணைந்த தகவல் கட்டமைப்பை உருவாக்க அரசு விருப்பம் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வணிக நடைமுறை மேம்பாட்டுத் தொழில் துறையைப் பொறுத்தவரை இத்திட்டங்களைச் செயல்படுத்த இதைவிட மிகச்சரியான நேரம் இருக்க முடியாது. இதற்கான வாய்ப்புகள் என்று பார்த்தால் இந்தத் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலானவை, இவை வெற்றி பெறுவதற்கும், எதிர்பார்த்த பயன்களைத் தருவதற்கும் ஒத்துழைப்புடன் கூடிய அணுகுமுறை அவசியமாகும். 14600 கோடி டாலர் மதிப்புள்ள இத்துறை பல்வேறு வெளிநாடுகளில் இத்தகைய சேவைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திவிட்டு, இப்போது திருப்பு முனைக்காக காத்திருக்கிறது. வெளிநாடுகளில் பெற்ற வெற்றியை இந்தியாவிலும் ஏற்படுத்திக் காட்டவும், அதன்மூலம் உள்ளூர் வளர்ச்சிக்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கவும் இதுதான் சரியான நேரம் ஆகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate