অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சிறுகடன்

சிறுகடன்

சிறுகடன் என்பது என்ன?

கிராமங்கள், ஓரளவு நகரத்தன்மை கொண்ட பகுதிகள், நகரங்கள் ஆகியவற்றில் உள்ள ஏழைகளுக்கு சிக்கனச் சேமிப்பு, கடன், பிற நிதிச் சேவைகள் மற்றும் சிறு அளவில் உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் வருமான நிலையினை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் ஒரு வசதி என்று சிறுகடன் விளக்கப்படுகிறது.

அதற்குரிய வட்டி விகிதங்கள் என்ன?

1991 ஆம் ஆண்டு நிதிப்பிரிவுச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வட்டி விகிதச் சீர்திருத்த நடப்புக் காலம் அமைந்தது. இந்தச் சீர்திருத்தச் செயல்பாட்டுக்கு உகந்த வகையில் வங்கி, சிறுகடன் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்குரிய வட்டி விகிதங்களும், சிறுகடன் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் பயனடையும் உறுப்பினர்களுக்கு வழங்கும் கடனுக்குரிய வட்டி விகிதங்களும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு விடப்பட்டது. கடன் வாங்கும் தனிநபர்களக்கு வங்கிகள் வழங்கும் நேரடிச் சிறுகடன்களுக்குரிய வட்டி விகிதங்களின் மேலுள்ள உச்ச வரையறை தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

சிறுகடன் பெறுவதற்குரிய விதிமுறைகளும் நிபந்தனைகளும் எவை?

அடிப்படை உண்மைகளை மனதில் கொண்டு தங்களின் கடன் வழங்கும் முறைமைகளை வடிவமைத்துக் கொள்ளும் சுதந்திரம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. கடனின் அளவு, நிறுவனத்தின் மதிப்பு, நிறுவனத்தின் அளவு, முதிர்வுக் காலம், சலுகைக்காலம், இலாபங்கள் சேமிப்புப் பொருள்களையும், தொடர்புடைய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மேற்கூறியவற்றை உள்ளடக்கிக் கருத்தில் கொண்டு உரிய கடன்களையும் சேமிப்புப் பொருள்களையும் வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அத்தகைய கடன்கள் ஏழைகளின் வேளாண்மை சார்ந்த, மற்றும் வேளாண்மை சாராத செயல்களுக்கு கடன்கள், கடன்களின் உருவாக்கத்தையும், நுகர்வையும் மட்டுமல்லாது வீடு, தங்குமிடம் போன்றவற்றை அபிவிருத்தி செய்துகொள்வதற்குரிய தேவைகளையும் உள்ளடக்கியது.

சுய உதவிக்குழு (SHG-Self Help Group) என்பது என்ன?

சுய உதவிக்குழு என்பது ஒரே வகையான சமூக பொருளாதார நிலையைச் சார்ந்தோர் தாமாகவே முன்வந்து தங்களுடைய அவசரத் தேவைகளுக்கு உதவும் வகையிலும், ஒருவருக்கொருவர் உதவும் அடிப்படையிலும் ஒன்று சேர்ந்து சிறுதொகைகளைத் தொடர்ந்து முறையாகச் சேமிக்க ஒத்துக் கொண்டு சேமிக்கப்பட்ட நிதியிலிருந்து அவர்களின் அவசரத்தேவைகளுக்காக ஒருவருக்கொருவர் நிதிஉதவி செய்து கொள்ளும் முறையில் அமைந்த ஒன்றிணைந்த தொழில் முனைவோர்களின் சிறிய பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத அமைப்பாகும். அதன் உறுப்பினர்கள் கடனை உரியமுறையில் பய்னபடுத்துவதற்கும் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கும் தங்களுடைய ஒன்றிணைந்த அனுபவ அறிவினையும், தோழமை வற்புறுத்தலையும்(Peer Pressure) பயன்படுத்துகிறார்கள். உண்மையிலேயே தோழமை வற்புறுத்தல்கள் என்பது துணைப் பிணையத்துக்குரிய(Collaterals Security) சக்தி வாய்ந்த மாற்றாக அங்கீகரிக்கப்படுகிறது.

சுய உதவிக் குழுக்களின் வழியே நிதி வழங்குவதில் உள்ள ஆதாயங்கள் எவை?

ஒரு குழுவின் ஒரு பகுதியாக ஒரு ஏழைத் தனிநபர் ஆற்றலைப் பெறுகிறார். மேலும் சுய உதவிக்குழுக்களின் வழியே நிதிவழங்குதல் கடன் வழங்கும் முறையில் உள்ள செலவினங்களைக் குறைக்கிறது. பெரிய எண்ணிக்கையில் சிறிய அளவுக்கணக்குகளுக்குப் பதிலாக, கடன்வழங்குவோர் ஒரே ஒரு சுய உதவிக் குழுவின் கணக்கினை மட்டுமே கையாண்டால் போதும். கடன் வாங்குவோர் சுய உதவிக்குழுவின் ஒரு விரிவாகையால், போக்குவரத்துச் செலவினங்களைக் குறைக்கலாம் (வங்கிக்கும் வங்கியிலிருந்து பிற இடங்களுக்கும்) தொடர்புடைய ஆவணங்கள் தொடர்பான பணியினை முடிப்பதற்கும், கடன் பெற வேண்டியும் வங்கிக்குப் பலமுறை சென்று வேலை நாளினை இழக்க வேண்டியதில்லை.

சிறு கடன் வழங்குவதில் அரசு சாரா நிறுவனம் என்ன பங்காற்றுகிறது?

சிறு தொழில் முனைவோரைக் கொண்ட சுய உதவிக் குழுக்களை நிறுவுதல், கடன் தொடர்புகள் அல்லது சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்குவதற்கென வங்கிகளிடமிருந்து பேரளவு நிதிகளைக் கடன்வாங்குதல் போன்ற பணிகளுக்காக அவற்றை வங்கிகளிடம் ஒப்படைத்தல் போன்ற சமூக அளவிலான இடையீட்டுப் பணிகளை ஒரு அரசு சாரா நிறுவனம் செய்கிறது.

சிறுகடன் வழங்குதற்கு என்று அண்மையில் கொண்டுவரப்பட்ட அடையாளக் குறியீடுகள் எவை?

1991-92 இல் நபார்டு வங்கியால் ஏழைகளுடன் இணக்கமான வங்கிச் செயல்பாடு கொள்வதை நிறைவேற்றும் நோக்கத்துடன், சிறுகடன் வழங்கும் பொருட்டு சுய உதவிக்குழுக்களையும் வங்கிகளையும் தொடர்புபடுத்தும் ஒரு முன்னோடித்திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்திய ரிசர்வ் வங்கி இந்தத் தொடர்புத் திட்டத்தில் செயல் முனைப்புடன் பங்கேற்குமாறு வணிக வங்கிகளைக் கேட்டுக் கொண்டது. இந்தத்திட்டம் அதனைத் தொடர்ந்து வட்டார வங்கிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2002 மார்ச்சு 31 அன்று சுய உதவிக்குழுக்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட வங்கிகளின் சராசரி எண்ணிக்கை 4,61,478 ஆகும். இதன் வழியே மார்ச்சு 31, 2002 அன்று 7.87 மில்லியன் ஏழைக்குடும்பங்கள் முறையான வங்கிச் சேவைகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதை உணர்த்துகிறது. வங்கியுடன் இணைக்கப்பட்ட குழுக்களில் 90 விழுக்காட்டுக்கு மேல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகும். சராசரியாக ஒரு குடும்பத்துக்கு ரூ. 1316/- ஒரு சுய உதவிக்குழுவுக்குச் சராசரியாக ரூ. 22,400/- என்ற அளவில் சுய உதவிக்குழுக்களுக்கு மார்ச்சு 31,2002 இல் வழங்கப்பட்ட மொத்த கடன்தொகை ரூ. 1026.34 கோடிகள் ஆகும். இணைப்புகளின் மாதிரி ஐ வகையில் கூறுவதெனில் மாதிரி I இடையீட்டினர் இல்லாமல் நேரடியாக சுயஉதவிக்குழுக்களுக்கு/அரசு சாரா நிறுவனமோ அல்லது முறையான முகவர்களோ இல்லாமல் – 16% மாதிரி II அரசு சாரா நிறுவனங்கள் (NGO), முறையான முகவர்களின் இடையீட்டுடன் நேரடியாக சுய உதவிக்குழுக்களுக்கு 75% மாதிரி III ஒரு அரசு சாரா நிறுவனத்தினைச் செயல்படுத்துவோர், அல்லது நிதியளி நிறுவனமாகக் கருதி அந்த அரசு சார் நிறுவனத்தின் மூலம் 9% என்பன மொத்தமாக இந்தத் திட்டத்தின் வகைளாகும். சுய உதவிக்குழுக்கள்/வங்கிகள் இத்தொடர்பு திட்டத்தில் 488 மாவட்டங்கள்/உள்ளடங்கியுள்ளன. 44 வணிக வங்கிகள் உள்ளிட்ட 444 வங்கிகள் (தனியார் துளையில் உள்ள 17 வங்கிகளையும் சேர்த்து), 191 வட்டார வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் 2155 அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

சுய உதவிக்குழுக்கள் - வங்கி தொடர்புத் திட்டம் உறுதியான நிதி வழங்கும் ஒரு திறன்மிக்க சிறுகடன் திட்டமாக வளர்ந்துள்ள நிலையில் வேறு மாதிரி சிறிய நிதிவழங்கும் வழிகளும் தோன்றியுள்ளன.

இவ்வாறு தோன்றியுள்ள மற்ற மாதிரிகள்

  1. சேமிப்பு, கடன் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு வங்கிக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ வங்கிச் சேவைகள் வழங்கும் ஒரு இடைப்பட்ட மாதிரி.
  1. அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு ஆகியோரை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஒரு மொத்த விற்பனை வங்கித் தொழில் மாதிரி (Wholesale banking Model). தனது பங்காளிகளுக்கு கடன்வசதியோடு திறமையை கட்டமைத்து உதவிடும் ஒரு புதியோர் கட்டமைப்பாகவும் இந்த மாதிரி விளங்குகிறது
  2. மேலும் தனிநபர் அல்லது பொறுப்புடைமை கொண்ட குழுக்கள் ஆகியோரை வாடிக்கையாளர்களாகக் கொண்ட தனிநபர் வங்கித் தொழிலை அடிப்படையாகக் கொண்ட மாதிரி (Individual Banking based Model). இந்த மாதிரியில் திட்ட மேலாண்மையும் வாடிக்கையாளர் சேவையும் சவாலுக்குரியதாய் இருப்பினும், தொழில் முறைவோருக்குக் கடன் வழங்குவதற்குரிய சிறந்த வகை மாதிரியாகும்.

ஏழைகளுக்கும் அமைப்பு சாரா பிரிவினருக்கும் கடன்வழங்கும் இந்த ஒப்புக்கொள்ளக்கூடிய மாதிரிகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள், அரசு சாரா நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் பலதரப்பட்ட நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன என்பதை மட்டும் கருதாமல், இதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பல்வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவை என்பதையும் எண்ணி செயல்திறமிக்க கொள்கை ஆதரவினை வழங்குவதற்கு ஒருங்கிணைந்து இயங்கும் அணுகுமுறையை நோக்கிச் செல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு சிறுகடன் வழங்குவதில் துணை மாதிரிகளும், போட்டி மாதிரிகளும் சேர்ந்து இருக்கும் வகையில், மேலும் துடிப்பு மிக்க நிலையில் இந்த சிறு நிதிவழங்கல் சூழலை வைக்கும் வகையில் தொடர்ச்சியான சில முன்முனைப்புக் செயல்களை வருகின்ற மாதங்களில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுகடன் திட்டங்களில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படுகிறதா?

சிறுகடன் திட்டங்களில் வெளிநாட்டினர் பங்கேற்பினை ஊக்கப்படுத்துவதற்காக அன்னிய நேரடி முதலீடு (FDI)/வெளிநாட்டு வணிக அமைப்புகள் (OCB) / இந்தியாவில் வாழாத இந்தியர்கள்(NRI) போன்றவர்களை சிறுகடன்/கிராமியக் கடன் போன்றவற்றினை அனுமதிக்கப்பட்ட, வங்கி அல்லா நிதிநிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்திய அரசின் ஆகஸ்ட் 29, 2000 நாளிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கும் சிறு தொழில்புரிவோருக்கும் நிதி வழங்கும் வகையில் சிறிய அளவில் கடன்வழங்குவதை உள்ளடக்கியது.

சிறுகடன் மேம்பாட்டு நிதி என்பது என்ன?

சிறுகடன் வழங்குவோர் தமது நிதி இடையீட்டாளர் சேவைமட்டும் வழங்குதல் என்னும் மிகச் சிறிய நோக்கிலிருந்து வாடிக்கையாளரைப் பற்றிய முழுமைத்தன்மை கொண்ட நோக்குடன் சந்தைக் கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு ஆகிய தொழில் முனைவோர் மேம்பாட்டுச் சேவைகளையும் உள்ளடக்கிய ஏழ்மை நீக்க அணுகுமுறைக்கு மாற வேண்டும். இந்தச் சூழலில் சிறு கடன் மேம்பாட்டு நிதி ஒரு முக்கியமான படி நிலையைக் குறிக்கிறது.

இந்தியாவில் எத்தனை வகையான சிறுகடன் வழங்குவோர் உள்ளனர். அவர்களை ஆளுகை செய்யும் இன்றைய ஒழுங்குமுறைச் சட்டம் எது?

வழங்குவோர் வகை

அவர்களின் செயல்பாடுகளை ஆளுகை செய்யும் ஒழுங்கு முறைச் சட்டம்

அ) உள்நாட்டு வணிக வங்கிகள்; பொதுத்துறை வங்கிகள்; தனியார் துறை வங்கிகள்; உள்ளூர் வங்கிகள்

  1. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934
  2. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949
  3. பாரத ஸ்டேட் வங்கிச்சட்டம் iv) பாரத ஸ்டேட்வங்கியின் இணை வங்கிகள் சட்டம்
  4. கையகப்படுத்துதல் மற்றும் பொறுப்பு மாறுதல் சட்டம் 1970 &1971

ஆ) வட்டாரகிராமப்புற வங்கிகள்

  1. வட்டார வங்கிகள் சட்டம் 1976
  2. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934
  3. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949

இ) கூட்டுறவு வங்கிகள்

  1. கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம்
  2. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS)
  3. இந்திய ரிசர்வ் வங்கிச்சட்டம் (பட்டியலிடப்பட்ட வங்கிகளுக்கு உரியது)

ஈ) கூட்டுறவுச் சங்கங்கள்

  1. MACS போன்ற மாநிலச் சட்டங்கள்

உ) பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)

  1. இந்திய ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 ii) வணிக நிறுவனங்கள் சட்டம் 1956

ஊ) பதிவு செய்யப்படாத வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs)

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்திருத்தம் 1997 நடைமுறைக்கு வரும் முன்னர் FI/NBFC வணிகத்தை நடத்திக் கொண்டிருந்த வங்கிகள் அல்லா நிதி நிறுவனங்கள் (CoR க்கு விண்ணப்பித்து இன்றுவரை அவ்விண்ணபங்கள் ரிசர்வ் வங்கியால் மறுக்கப்பட்டப்படாதவை)

எ) சங்கங்கள், பொறுப்பு

  1. கூட்டுறவுச் சங்கங்கள் பதிவுச்சட்டம், 1960
  2. இந்திய பொறுப்பு நிறுவனங்கள் சட்டம்
  3. இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 இன் அத்தியாயம் III C
  4. மாநில வட்டித் தொழிலர் சட்டம்

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/17/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate