অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை

குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆதார் எண்களை இணைக்கும் முறை

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.

  • ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • TNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும்.
  • அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும்.
  • உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும்.
  • முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதான செயல். விரைவாக பதியப்பட்டு விடும்.
  • மேலும் இந்த Application மூலம் நமது ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை வீட்டில் இருந்தே நாம் கண்காணிக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு பொது விநியோகத்திட்டம்

பயனரின் கட்டுரை

தெரிந்து கொள்ள வேண்டியவை

ரேஷன் கார்டில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடையில் பதிவு செய்ய முடியாது. மண்டல அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும் என கடைக்காரர் கூறுவார். ஆனால் அது தேவையில்லை. 1967 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் அடுத்து குடும்ப அட்டை வைத்திருப்பவரா என்பதற்கு 2ஐ அழுத்தினால் சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார்.

அவர் உங்கள் ரேஷன் கார்டில் மேலே உள்ள எண்ணை கேட்பார். எ.கா. 005/w/ 33657778 என்ற எண்ணை சொல்லவும்.

பின்னர் குடும்ப அட்டையில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கேட்பார். அதையும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் போன் செய்வதற்கு முன் ரேஷன் கார்டையும், ஆதார் கார்டையும் கையில் வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொன்னவுடன் நீங்கள் விரும்பிய மொபைல் நம்பரை பதிவு செய்யலாம். அல்லது நம்பரை மாற்றலாம். அடுத்த 2 நிமிடங்களில் உங்கள் மொபைல் எண் ஆக்டிவேட் ஆகிவிடும்.

இதற்காக வேகாத வெயிலில் மண்டல அலுவலகம் சென்று நிற்க வேண்டாம்.

இதேபோல, ரேஷன் கடையில் நீங்கள் ஆதார் அட்டை மட்டும்தான் பதிவு செய்திருப்பீர்கள். ஆனால் போட்டோ கொடுத்திருக்க மாட்டீர்கள். அதனால் உங்களுக்கு ஸ்மார் கார்டு வராது.

போட்டோவை மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது TNEPDS என்ற இணைதளம் மூலமாகவோ மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். அதன் பிறகுதான் ஸ்மார்ட் கார்டு பிரிண்ட் செய்வார்கள்.

புதிதாகவும் ஸ்மார்ட் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்:

க.பாபு, 
கூட்டுறவுசார் பதிவாளர் / பொது விநியோகத் திட்ட அலுவலர், 
தொலைப்பேசி எண் : 9976510606

கடைசியாக மாற்றப்பட்டது : 7/15/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate