ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்து விட்டால் அவரின் சொத்துக்களையோ அல்லது பணப் பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ். ஒருவர் இறந்த பின் அவரின் சொத்துக்களைப் பிரச்சனை இல்லாமல் வாரிசுகள் பகிர்ந்துகொள்வதற்கு வாரிசுச் சான்றிதழ் மிகவும் அவசியம்.
நிதி நிறுவங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்பு தொகையைப் பெற கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்பு பெற எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசு பணியில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது. மேலும், இறந்தவருடைய சொத்துக்களை விற்பதற்கோ அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையைக் காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
சாதிச் சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ அதுதான் வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும். வாரிசுச்சான்றிதலுக்கான விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்ககளில் கிடைக்கும். வாரிசு சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாக விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும்.
ஆதாரம் : வட்டாச்சியர் அலுவலகம்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020