অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015

பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015

ஓர் அறிமுகம்

2005-இல் VAT வரித் திட்டத்தினை நாடு முழுக்க அமல் செய்த மத்திய அரசு தற்போது புதிய வரி மறுமலர்ச்சித் திட்டமாக, ‘பொருள்-சேவை வரிச் சட்டம் 2015” எனப்படும் புதிய சட்டத்தினைக் கொண்டுவர முனைப்புடன் செயல்படுகிறது. இதில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம்.

மாநில அரசுகள் & மைய அரசு இப்போது ஒன்றிணைந்து வரி மறுமலர்ச்சி (PROGRESSIVE TAX REFORMS) இந்தியாவில் உருவாக்க ஒருமித்த பயணத்தைத் துவக்கியுள்ளனர். புதிய வரி சகாப்தம் / வரலாறு படைக்க இது ஒரு நல்ல தருணம்.

வரிகள்

  1. வருமானவரி – நேர்முகவரி : (மக்களே நேரடியாக அரசுக்குச் செலுத்தும் வரி, சர்சார்ஜ், செஸ் வரி)
  2. கலால் வரி, சேவைவரி, இறக்குமதித் தீர்வை, VAT,CST வரி, சினிமா வரி,நுழைவு வரி, சுங்க வரி  –   மறைமுக வரிகள் (நிறுவனங்கள், வணிகர்கள் மக்களிடமிருந்து பில் வாயிலாக வசூலித்து அரசுக்குச்செலுத்தும் வரிகள்)

இந்த மறைமுக வரிகளை செயல்படுத்தத் தற்போதைய சட்டங்களில் செயல்பாடுகள் தாமதமாகி வருகிறது.  வணிகர்களுக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.  இவைகளைத் தவிர்த்து மிகவும் எளிதான & விரைவான பணிகளைச் செய்து முடிக்க மத்திய அரசு & மாநில அரசுகளும் GST என்ற புதிய வரித்திட்டத்தை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு அதனை 01.04.2016 முதல் அமல்படுத்த முனைந்து வருகின்றன. இந்த புதிய வரிச்சட்டம் இப்போது நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் வரிச்சட்டங்களுக்குப் பதிலாகச் செயல்படுத்தப்படும்.

A) பழைய வரிகள் (CENTRAL) – மத்திய கலால் வரி, சேவை வரி, இறக்குமதித் தீர்வை, மருந்து, டாய்லெட் இனம் மீது எக்சைஸ் வரி, இதர கூடுதல் உபரி வரி & செஸ் வரிகள்

B) மாநில வரிகள் - VAT விற்பனை வரி, கொள்முதல் வரி, நுழைவு & சுங்க வரிகள், CST வரி, கேளிக்கை, சினிமா, லாட்டரி வரி, ஆடம்பர & பந்தய வரிகள்

C) புதிய சட்டம் -GOODS&SERVICE TAX 2015

பொருள்- சேவை வரிச்சட்டம் -2015

4) அரசியல் சட்டத் திருத்தம்/வரி மறுமலர்ச்சியின் முதல்படி, முதல் பயணம்:

இந்த ஒருங்கிணைந்த GST சட்டத்தினைப் பார்லிமெண்ட் இயற்ற அரசியல் சாசனத்தின் அனுமதியும் சட்டத்திருத்தமும் தேவை.  பொருள்-சேவை வரிகளை விதித்து வசூலிக்க ‘அரசியல் சாசன 122ஆம் திருத்த மசோதா 2014” நவம்பர்-2014 குளிர்காலக் கூட்டத்தில் ‘மக்களவையில்” மத்திய அரசு கொண்டு வந்தது.  இதற்கு முன்பு 23.03.2012-இல் அறிமுகம் செய்யப்பட்ட இத்தகைய திருத்த மசோதாவுக்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.  சில திருத்தங்கள், மாநில அரசுகளின் கோரிக்கைகள், நஷ்ட ஈட்டுத்தொகை பற்றிய விவரங்களை விவாதித்த பின்னர் தற்போது ‘புதிய மசோதா எண். 122/2014” அறிமுகம் ஆகியுள்ளது.  இதில் அநேக நல்ல அம்சங்கள் உள்ளன.

5).’அரசியல் சாசனத் திருத்த மசோதா எண். 122/2014” எதிர்வரும் பிப்ரவரி பட்ஜெட் 2015-16 கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் விவாதித்து, உரிய திருத்தம் செய்த பின்னர் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்படும். இதனை மாநில சட்ட மன்றங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.  பின்னர் மக்களின் விவாதத்திற்கு அரசு இணையத்தில், இந்திய அரசு கெசட்டில் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து வணிகசங்கங்கள், ஸ்தாபனங்கள், ஏற்றுமதி நிறுவனம், பொதுத்துறை நிறுவனம், வங்கிகள் மற்றும் சேவை வழங்கும் அனைவரும் (STAKE HOLDERS), பொதுமக்கள், தணிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் இந்த சட்டத்தினைப் பற்றி நீண்ட விவாதம் செய்து அரசுக்கு ஆலோசனை வழங்குவர்.

6. மத்திய நிதியமைச்சகம், மாநில அரசுகளும் இந்த அரசியல் சாசன அனுமதிச் சட்டத்தில் உள்ள வரிவிதிப்பு முறைகள், பொருள் & சேவை இனங்கள் மீது தமது கருத்துக்களைத் தொகுத்து, அடுத்து எவ்வாறு எளிதாக GST சட்டங்களைப் பார்லிமெண்ட், மாநில சட்ட மன்றங்கள் ஆகியவற்றில் அறிமுகப்படுத்துவது பற்றி அரசுக்கு ஆலோசனை வழங்குவர்.  இதுவே வரிப் புரட்சியின் முதல் அத்தியாயம்-முதல் பயணம். இது ஒரு தயார் நிலை எனலாம்.

7. அரசியல் சாசன அனுமதியின் பேரில் என்ன என்ன சட்டங்கள் இயற்றப்படும்?

நாடாளுமன்றம் -

1.CENTRAL GST ACT 2015

2. INTERSTATE GST ACT 2015

a) CENTRAL GST ACT BY PARLIMENT :

தற்போதைய மைய கலால் வரி, இறக்குமதித் தீர்வை, சேவை வரி, செஸ், கூடுதல் சர்சார்ஜ் வரிகள் இந்த மையச் சட்டத்தில் இணைக்கப்படும்.  இதில் பெறப்படும் வரிவரவுகளை மத்திய அரசு எடுத்துக் கொள்ளும்.  புதிய வரிகளை வழக்கம் போல் பதிவு வணிகர்கள், நிறுவனங்கள்  வசூலிக்கலாம்.

b) INTERSTATE GST ACT BY PARLIMENT:

தற்போதைய GST சட்டத்திற்குப் பதிலாக, இடைமாநிலக் கொள்முதல் & விற்பனை பேரங்களை ஒழுங்குபடுத்த, நெறிப்படுத்த, முறைப்படுத்த இந்தச் சட்டத்தினை நாடாளுமன்றம் இயற்றும்.  நாடு முழுக்க இந்த சட்டத்தில் ஒரே வரிவிகிதம் இருக்கும்.  CSTயில் உள்ள ‘C’F E1 படிவம் , H படிவங்கள் இராது. இது ஓர் எளிய முறையான சட்டம்.  வணிகர் வரிவசூல் செய்யலாம்.  ITC பெற வாய்ப்புண்டு. இந்த சட்டத்தில் ரூல்ஸ், வரிவிதிப்பு, வரிவிலக்கு விவரம் பின்னர் சட்டத்தில் இணைக்கப்படும்.

c) STATE LEGISLATURES

மாநிலச் சட்ட மன்றம் — STATE GST ACT  2015.

தற்போது VAT & CST, நுழைவு வரிச்சட்டங்களில் உள்ள அனைத்து வரிகளும் இணைந்த ஒரே சட்டம் ஆகும். இதனை ஒவ்வொரு மாநில அரசும் சட்டமன்றத்தில் இயற்றிய பின்னர் 01.04.2016 முதல் அமலுக்கு வரும். சட்டமியற்றிய பின்னர் அனைத்து மாநில GST அம்சங்களும் தெரிய வரும்.

d) 01.01.2015 முதல் 31.12.2015-க்குள் இந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மக்களின் கருத்துக்களைக் கேட்டு உரிய ஆலோசனைகளைப் பெற்று சட்டங்கள் முழு வடிவம் பெற வேண்டும். இந்தச் சட்டத் தொகுப்பு ஒரு முழுமையான சட்ட ஆவணம் (STATUES) ஆக இருக்க வேண்டும். GST வரிச்சட்டங்களைத் தொகுத்த பின்னர் வரிவிதிப்பு, அலுவலகங்கள் கணினி மயமாக வேண்டும்.

அ)  தற்போது 140 நாடுகளில் இந்த GST சட்டம் அமலில் உள்ளது.  பல  நாடுகளில் உள்ள சட்டத்தின் நல்ல, எளிய அம்சங்கள் இதில் இணைந்துள்ளன.  இது எளிதானது, துரிதமானது. மக்களின் சேவைக்கு ஏற்ற ஒரு சட்டமா எனில் அது உண்மை.

ஆ)  மறைமுக வரிகள் அனைத்தும் மொத்தம் மூன்று சட்டங்களில் இடம் பெறும்.

வணிகர் பதிவு செய்து கொண்ட ஒருங்கிணைந்த மாதாந்திர படிவம் ஒன்று மட்டும் பயன்படுத்தி வசூலித்த வரிகளைத் தாமதமின்றி அந்தந்த வரிச்சட்டங்களில் எளிதாகச் செலுத்தலாம்.

இ) உற்பத்தியாளர், பெரிய வணிகர், மொத்த வணிகர், சில்லரை வணிகர் , நுகர்வோர் அனைவரும் இதன் பலனைப் பெறுவர்.

ஈ) GST ஆலோசனை மன்றம் GST COUNCIL :

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரப்படி மாநில, மத்திய அமைச்சர்கள் அடங்கிய GST கூட்டுக்குழு ஓர் ஆலோசனை மன்றமாக இருக்கும். GST பற்றிய நடைமுறைகள், தெளிவுரைகள், வரி விகிதம், வரிவிதிப்பு பற்றிய ஆலோசனைகளை அரசுகளுக்கு அவ்வப்போது இந்த மன்றம் தெரிவிக்கும்.  இது ஓர் அருமையான சட்ட வடிவம்.

உ) 01.04.2016 இல் GST சட்டங்கள் அமல்படுத்தும் போது அனைத்து மறைமுக தற்போதைய வரிச் சட்டங்கள் ரத்து ஆகி விடும். 01.01.2015 முதல் 31.12.2015 வரை மக்களிடையே கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற வேண்டும்.  ஏன் எனில் இது மக்களுக்கான சட்டம் ஆகும்.

ஊ) இனிமேல் மாநில அரசுகள் சில குறிப்பிட்ட சேவை இனங்கள் மீது புதிதாக வரி விதிப்பதால் கூடுதல் வரி வரவு கிடைக்கும். அதே போல, பொருள் சப்ளை மீது மத்திய அரசு இந்தச் சட்டத்தில் புதிதாக வரிவிதிப்பு செய்வதால் மத்திய தொகுப்புக்கு வரிவரவு 70% கூடுதலாகும். மத்திய அரசுக்கு இது ஒரு மிகப்பெரிய போனஸ் ஆகும். இதனால் GDP என்ற குறியீடு உயரும். மத்தியில் பற்றாக்குறை பட்ஜெட் இராது. கடன் சுமை குறையும்.

எ) மது வகைகளுக்கு GST-இல் இடம் இல்லை. வரிவிகிதம், வரிவிலக்கு, பதிவுமுறை நடைமுறைகள், ரூல்கள், சேவை இனங்கள், பொருள்களின் பட்டியல் விவரம் அந்தந்த மாநில மற்றும் மத்திய GST சட்டங்களில் இடம் பெறும். ஏயுவு சட்டம் போல் ஐவுஊ வரவு பெற்றுப் பயன்படுத்தலாம். இதனால் உற்பத்தி செலவுகள் குறையும், விலைவாசி ஸ்திரமாக இருக்கும்.

9. பிற கூடுதல் பயன்கள்:

·    நாடு தழுவிய அளவில் வர்த்தக பரிவர்த்தனை பெருகும், உற்பத்தி பெருகும், வேலை வாய்ப்பு மிகுதி ஆகும். மக்களின் வாங்கும் சக்தி அதிகம் ஆவதால் அரசுக்கு GST மூலம் வரிவரவு பெருகும் வாய்ப்புள்ளது.

·    VAT நிர்வாகத்திலிருந்து GST-க்கு மாறுவதால் சில மாநிலங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் வரி வரவு ஏற்றம்-இறக்கம் இருக்கும். இதனை ஈடு செய்ய அரசியல் சாசனப்படி மாநிலங்களுக்கு இழப்புத் தொகை வழங்கப்படும்.  இது மாநிலங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். இது ஒரு யுகப் புரட்சி எனலாம்.

·    வரிவசூல் இன்வாய்ஸ் மூலம் நடைபெறுவதால் வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பு இல்லை. கருப்புப் பணப் பொருளாதாரம் 70 – 90% குறைய வாய்ப்புண்டு.

·    வங்கிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.  துடிப்பு மிக்க இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரம் பெருகும். பணப்புழக்கம் பெருகும். உற்பத்தி செலவு குறைவதால் ஏற்றுமதியால் அன்னிய இருப்பு மிகுதியாகும். விலைகள் கட்டுப்படுத்தப்படும்.

ஆதாரம் : லாயர்ஸ் லைன் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate