অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

துல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி

துல்லிய பண்ணையம் நாற்றாங்கால் உற்பத்தி

தக்காளி

1. தரமான நாற்று உற்பத்தி:

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

  • தக்காளி நாற்றுகளை குழித்தட்டுகளில் நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்
  • 1 மீ அகலம் மற்றும் போதமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா 1 கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 100 கிராம் வீரிய ஒட்டு இரக விதை போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளின் மீது வைக்க வேண்டும்
  • விதை முளைக்கும் வரை ஒரு நாளுக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்கவேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும்
  • 25 முதல் 30 நாட்களில் தக்காளி நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் அடியுரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • எக்டருக்கு 1172 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தினை அடியுரமாக இடவேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • அகல மேட்டு பாத்திகலப்பையின் மூலமோ அல்லது வேலையாட்களின் மூலமோ 4 அடி அகலமும் ஒரு அடி உயரமும் உடைய மேட்டுப்பாத்திகளை பக்கவாட்டு இணை குழாய்களுக்கு இணையாக ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்
  • செடி நடுவதற்கு முதல் நாள் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுவதும் நன்கு நீரால் நனைக்க வேண்டும். இதற்கு மண்ணின் தன்மை காலநிலையைப் பொறுத்து சுமார் 8-12 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 3 லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான பெண்டிமெத்தலின் (ஸ்டாம்ப்) தெளிக்க வேண்டும்
  • நன்கு வளர்ச்சியடைந்த நாற்றுகளை 90 x 60 x 60 செ மீ என்ற இடைவெளியில் இரட்டை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும்
  • 16 தக்காளி நாற்று வரிசைகளுக்கு ஒரு வரிசை என்ற விகிதத்தில் 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • வீரிய ஒட்டு தக்காளி இரகங்களுக்கு 200:250:200 கிலோ தழை மணி மற்றும் சாம்பல் சத்து என்ற அளவில் மூன்று நாட்கள் இடைவெளியில் பயிர்க் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 30 ஆம் நாள் மூங்கில் அல்லது சவுக்கு மரக்குச்சிகளை நட்டு செடிகள் சாயாவண்ணம் சணல் கயிறு கொண்டு கட்ட வேண்டும்
  • டிரைகாண்டனால் வளர் ஊக்கியினை 1.25 மி.லி / லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து 15 மற்றும் 30 ஆம் நாள் தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 45, 60 மற்றும் 90 ஆம் நாள் பூ உதிர்வதைக் கட்டுப்படுத்த பிளானோஃபிக்ஸ் 500 லிட்டர் தண்ணீருக்கு 125 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்
  • 0.1சதவிகித நுண்ணூட்டச் சத்துக்கலவையினை நடவு செய்த 40 மற்றும் 80 ஆம் நாள் தெளிக்க வேண்டும்
  • 19:19:19 மற்றும் மாங்கனீசை ஒரு சதவிகிதம் (10 கி / லி) என்ற அளவில் நடவு செய்த 60 ஆம் நாள் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடைபின் செய் நேர்த்தி:

  • சந்தை தேவையினைப் பொறுத்து தக்காளி பழங்களை பாதி பழுத்த நிலையிலோ அல்லது முழுவதும் பழுத்த நிலையிலோ அறுவடை செய்ய வேண்டும். நடவு செய்யும் பயிர் 60 ஆம் நாளிலேயே அறுவடைக்கு வந்துவிடும்
  • பழங்களை அவற்றின் அளவு எடை அடிப்படையில் மூன்று தரங்களாக அதாவது சீரான பெரிய பழங்கள் சிறிய அளவு மற்றும் சேதாரம் மற்றும் உருமாற்றம் கொண்ட பழங்கள் என்று பிரித்து தனித்தனியே பிளாஸ்டிக் கிரேட்டுகளில் நிரப்ப வேண்டும்

கத்தரி

1. தரமான நாற்று உற்பத்தி:

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் கத்தரி விதைகள் போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளின் மீது வைக்க வேண்டும்
  • விதை முளைக்கும் வரை ஒரு நாளுக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும்
  • 35 நாட்களில் கத்தரி நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் அடியுரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின் போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுவரத்துடன் கலந்து இட வேண்டும்
  • நடவு வயலை நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளாக அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 3 லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான பெண்டிமெத்தலின் (ஸ்டாம்ப்) தெளிக்க வேண்டும்
  • 35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை 0.5 சதவிகித சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கலவையில் 30 நிமிடங்கள் நனைத்த பின்பு 90 x 60 x 75 செ மீ இடைவெளியில் இரட்டை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும்
  • 16 கத்தரி நாற்று வரிசைகளுக்கு ஒரு வரிசை என்ற விகிதத்தில் 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • வீரிய ஒட்டு தக்காளி இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு 200:150:200 கிலோ தழை மணி மற்றும் சாம்பல் சத்தினை நடவு செய்தது முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் முறையில் நீர்வழி உரமாகக் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்:

  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 15 மற்றும் 30 ஆம் நாட்களின் டிரைகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்றளவில் தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 45, 60 மற்றும் 90 ஆம் நாட்களில் பிளானோஃபிக்ஸ் என்ற வளர் ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.25 மி.லி என்ற அளவில் தெளித்து பூ உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்
  • நுண்ணூட்டச் சத்துக் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் நடவு செய்த 40 மற்றும் 80 ஆம் நாளில் தெளிக்க வேண்டும்
  • 19:19:19 மற்றும் மாங்கனீசை ஒரு சதவிகிதம் (10 கி / லி) என்ற அளவில் நடவு செய்த 60 ஆம் நாள் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடைபின் செய் நேர்த்தி:

  • நன்கு முதிர்ந்த காய்களை அறுவடை செய்ய வேண்டும்
  • காய்களை அவற்றின் அளவின் அடிப்படையில் தரம் பிரித்து பூச்சி தாக்குதல் உள்ள காய்களை நீக்கி பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்ப வேண்டும்

மிளகாய்

1. தரமான நாற்று உற்பத்தி:

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் மிளகாய் விதைகள் போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளின் மீது வைக்க வேண்டும்
  • விதை முளைக்கும் வரை ஒரு நாளுக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச் சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்களில் மிளகாய் நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் அடியுரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 375 கிலோ என்ற அளவில் கடைசி உழவின் போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடியை எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுவரத்துடன் கலந்து இட வேண்டும்
  • நடவு வயலில் 120 செ மீ அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 30 செ மீ இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 1 லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான ஃப்ளூக்ளோரலின் அல்லது பெண்டிமெத்தலின் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்கள் வயதான ஆரோக்கியமான மிளகாய் செடிகளை இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 45 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
  • நடவுக்கு முன் 0.5 சதவிகித சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைக்க வேண்டும்
  • 16 மிளகாய் நாற்று வரிசைகளுக்கு ஒரு வரிசை என்ற விகிதத்தில் 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • நடவு செய்த மூன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் எக்டருக்கு 120:80:80 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை கரையும் உரப்பாசன முறையில் செடியின் வளர்ச்சிக் காலம் வரை கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்:

  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • நுண்ணூட்டச் சத்துக் கலவையை எக்டருக்கு 500 கிராம் என்றளவில் நடவு செய்த 40, 80 மற்றும் 120 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட்டு ஒரு சதவிகிதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 15 மற்றும் 30 ஆம் நாட்களில் டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • பிளானோஃபிக்ஸ் 0.25 மி.லி / லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60, மற்றும் 90 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் இறுவடை பின்செய் நேர்த்தி:

  • நன்கு முதிர்ந்த காய்களை நடவு செய்த 70 நாட்களுக்கு பின்னர் நான்கு நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும்
  • காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பொட்டிகளில் நிரப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்

பாப்ரிகா (அ) பஜ்ஜி மிளகாய்

1. தரமான நாற்று உற்பத்தி:

பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 360 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் பாப்ரிகா விதைகள் போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளின் மீது வைக்க வேண்டும்
  • விதை முளைக்கும் வரை ஒரு நாளுக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச் சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்களில் பாப்ரிகா நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் அடியுரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின் போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுவரத்துடன் கலந்து இட வேண்டும்
  • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 1 லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான ஃப்ளூக்ளோரலின் அல்லது பெண்டிமெத்தலின் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்கள் வயதான பாப்ரிகா செடிகளை 0.5 சதவிகித சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பின்பு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 45 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
  • 10 பாப்ரிகா செடி வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசை 35 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 250 : 150 : 150 கிலோ என்ற அளவில் உரப்பாசனம் மூலம் நீரில் எளிதில் கரையும் உரங்களைக் கொண்டு நடவு செய்தது முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் உரமிட வேண்டும்

4.பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்:

  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட்டு ஒரு சதவிகிதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • பிளானோஃபிக்ஸ் 0.25 மி.லி / லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60, மற்றும் 90 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்

5.அறுவடை மற்றும் இறுவடை பின்செய் நேர்த்தி:

  • நன்கு வளர்ச்சியடைந்த காய்களை நடவு செய்த 70 ஆம் நாள் முதல் அறுவடை செய்யலாம்
  • காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பொட்டிகளில் நிரப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்

குடை மிளகாய்

1.தரமான நாற்று உற்பத்தி:
பாதுகாக்கப்பட்ட நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 300 கிலோவுடன் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா ஒரு கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 200 கிராம் குண்டு மிளகாய் விதைகள் போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லத்தை கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைத்த ஆறு நாட்களுக்கு பிறகு குழித்தட்டுகளை மேட்டுப்பாத்திகளின் மீது வைக்க வேண்டும்
  • விதை முளைக்கும் வரை ஒரு நாளுக்கு 2 முறை என்ற முறையில் தினமும் பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்க வேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச் சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்களில் பாப்ரிகா நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் அடியுரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் உரத்தை ஒரு எக்டருக்கு 703 கிலோ என்ற அளவில் கடைசி உழவின் போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 5 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 100 கிலோ தொழுவரத்துடன் கலந்து இட வேண்டும்
  • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 1 லி என்ற அளவில் முளை முன் களைக் கொல்லியான ஃப்ளூக்ளோரலின் அல்லது பெண்டிமெத்தலின் தெளிக்க வேண்டும்
  • 35 நாட்கள் வயதான குடை மிளகாய் செடிகளை 0.5 சதவிகித சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்த பின்பு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
  • 10 குடை மிளகாய் செடி வரிசைகளுக்கு இடையில் ஒரு வரிசை 40 நாட்கள் வயதுடைய செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 250 : 150 : 150 கிலோ என்ற அளவில் உரப்பாசனம் மூலம் நீரில் எளிதில் கரையும் உரங்களைக் கொண்டு நடவு செய்தது முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் உரமிட வேண்டும்

4.பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்:

  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு மற்றும் பொட்டாசிய நைட்ரேட்டு ஒரு சதவிகிதம் என்றளவில் நடவு செய்த 60 மற்றும் 100 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்
  • பிளானோஃபிக்ஸ் 0.25 மி.லி / லி என்றளவில் தண்ணீருடன் கலந்து 45, 60, மற்றும் 90 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்

5.அறுவடை மற்றும் இறுவடை பின்செய் நேர்த்தி:

  • நன்கு வளர்ச்சியடைந்த காய்களை நடவு செய்த 70 ஆம் நாள் முதல் அறுவடை செய்யலாம்
  • காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து பிளாஸ்டிக் பொட்டிகளில் நிரப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்

வெண்டை

1.நடவு வயல் தயாரித்தல்:

  • நடவு வயலினை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஒர முறையும் பின் சட்டிக் கலப்பை மற்றும் கொக்கிக் கலப்பை கொண்டு தலா ஒரு முறையும் உழவு செய்ய வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2 கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன்கள் தொழுவுரம் அடியுரமாக இட்டு நன்கு உழவேண்டும்
  • அடியுரமாக சூப்பர் பாஸ்பேட் ஒரு எக்டருக்கு 468.75 கிலோ என்ற அளவில் கடைசி உழவின்போது இட வேண்டும்

2. விதை நேர்த்தி:

  • ஒரு எக்டருக்கு 6 கிலோ என்ற அளவில் வீரிய ஒட்டு விதைகள் தேவைப்படுகின்றது
  • தேர்வு செய்யப்பட்ட விதைகளை ஒரு கிலோ அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து கலந்து நிழலில் 30 நிமிடம் உலர்த்த வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 1-2 செ மீ ஆழத்தில் 60 x 45 x 45 செ மீ என்ற இடைவெளியில் மூன்று வரிசை முறையில் விதைகளை ஊன்ற வேண்டும்
  • விதைத்த மூன்றாம் நாளில் ஒரு எக்டருக்கு ஒரு கிலோ ஃப்ளூக்ளோரலின் அல்லது 0.75 கிலோ மெட்டலாக்ளோர் என்ற முலைமுன் களைக் கொல்லியை தெளிக்க வேண்டும்
  • நடவு செய்த 7 ஆம் நாள் சத்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 250 : 100 : 100 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை நீரில் எளிதில் கரையும் உரங்கள் மூலம் விதை ஊன்றியது முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனமாகக் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில் நுட்பம்:

  • தினமும் ஒரு மணி நேரம் என்ற அளவில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் பாய்ச்ச வேண்டும்
  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதவிகிதத்தை 15 நாட்கள் இடைவெளியில் 6 முறை தெளிக்க வேண்டும்
  • களை வளர்ச்சியைப் பொறுத்து 30 மற்றும் 60 ஆம் நாள் இரு முறை களையெடுக்க வேண்டும்
  • விதைத்த 40 மற்றும் 60 ஆம் நாள் நுண்ணூட்ட சத்துக் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • நீரில் கரையும் 19:19:19 மற்றும் மாங்கனீசு ஒரு சதவிகிதம் என்றளவில் விதைத்த 60 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடையின் பின்செய் நேர்த்தி:

  • விதைத்த 45 ஆம் நாள் முதல் காய்களை அறுவடை செய்யலாம்
  • பூச்சி தாக்குதல் மற்றும் உருமாற்றம் உடைய காய்களை தனியாக பிரித்தெடுக்க வேண்டும்
  • காய்களை ப்ளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பி சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

பெரிய வெங்காயம் / பெல்லாரி வெங்காயம்

1.தரமான நாற்று உற்பத்தி:
மேட்டுப்பாத்தி:

  • பெரிய வெங்காய நாற்றுக்கள் ஒரு அடி உயரம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப்பாத்திகளின் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • மேட்டுப்பாத்திகளில் ஒரு சதுர மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் ஏ.எம் என்ற நன்மை செய்யும் பூசனக் கலவையினைக் கலக்க வேண்டும்

விதை நேர்த்தி மற்றும் விதை அளவு:

  • ஒரு எக்டருக்கு 8 முதல் 12 கிலோ விதைகள் தேவைப்படுகின்றது
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லம் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்

விதைத்தல்:

  • விதைகளை மணலுடன் கலந்து பாத்திகளின் மீது தூவ வேண்டும்
  • விதைத்த பின்பு மெல்லிய அடுக்கு மணலை விதைகளனி் மேல் தூவி வைக்கோலை கொண்டு மூட வேண்டும் தினமும் இரண்டு முறை பூவாலி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்
  • பூஞ்சானத்
  • தாக்குதலில் இருந்து நாற்றுக்களைக் காப்பாற்ற ஒரு லிட்டருக்கு 2 கிராம் காப்பர் ஆக்ஸி க்ளோரைடு என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • நாற்றுக்களை சுமார் 45-50 நாட்களில் நடவு செய்யலாம்

2. நடவு வயல் தயாரித்தல் மற்றும் நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் 235 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். கடைசி உழவுக்கு முன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • உயிர் உரங்களுடன் துத்தநாக சல்பேட்டு மற்றும் ஃபெர்ரஸ் சல்பேட்டு தலா 50 கிலோ கடைசி உழவுக்குமுன் இட வேண்டும்
  • நடவுக்கு முன் 1.2 மீட்டர் அகலம் மற்றும் 1 அடி உயரமுடைய மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்று நடுவதற்கு முன்னர் மண்ணின் தன்மையினைப் பொறுத்து (8-12 மணி நேரம் முன்பாக) சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுவதும் நனைக்க வேண்டும்
  • நாற்றுக்களை இரட்டை வரிசை முறையில் வரிசைகளுக்கு இடையே 15 செ மீ மற்றும் செடிகளுக்கு இடையே 10 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்

3. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்தது முதல் தினமும் 1-2 மணி நேரம் சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்
  • நடவு செய்த 30 ஆம் நாள் முதல் களையெடுக்க வேண்டும்
  • பயிர்காலம் முழுதும் 60 :60 : 60 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் நீர் உரப்பாசனமாக கொடுக்க வேண்டும்

4. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • இரகங்களைப் பொறுத்து 75 நாட்கள் முதல் 100 நாட்களில் அறுவடை செய்யலாம்
  • அறுவடைக்கு 15 நாட்கள் முன்பாக நீர் பாசனத்தை நிறுத்துவதோடு மாலிக் ஹைட்ரஸைடு என்ற பயிர் வினையூக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 500 மி. கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் சேமித்தலின் போது காய்கள் முளைப்பது தவிர்க்கப்பட்டு 6 முதல் 7 மாதங்கள் சேமிக்கவும் முடியும்
  • வெங்காயத்தாள் 50 சதவிகிதம் காய்ந்தவுடன் அறுவடையை தொடங்க வேண்டும். அறுவடை செய்த காய்களை மேல் தாள்களை நீக்கி 10-15 நாட்கள் நிழலில் உலர்த்திய பின்பு தரம் பிரிக்க வேண்டும்

சிறிய வெங்காயம்

1. நடவு வயல் தயாரித்தல்:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் 285 கிலோ சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும். மேலும் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலம் ஒரு அடி உயரமுள்ள மேட்டுப்பாத்திகளை பக்கவாட்டு இணை குழாய்களுக்கு இணையாக ஒரு அடி இடைவெளியில் அமைத்து குழாய்கள் பாத்தியின் மையத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும்

2. நடவு:

  • வெங்காயப் பற்களை இரட்டை வரிசை முறையில் வரிசைகளுக்கு இடையே 20 செ மீ மற்றும் செடிகளுக்கு இடையே 12 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு 1500 கிலோ அளவில் வெங்காயப் பற்கள் தேவை
  • நடவு செய்தவுடன் நிலம் முழுவதும் நனையும் வரை சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்ச வேண்டும்

3. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்தது முதல் தினமும் 1-2 மணி நேரம் சொட்டுநீர் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்

4. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • இரகங்களைப் பொறுத்து 75 நாட்கள் முதல் 160 நாட்களில் அறுவடைக்கு தயாராகின்றது
  • அறுவடைக்கு 15 நாட்கள் முன்பாக நீர் பாசனத்தை நிறுத்துவதோடு மாலிக் ஹைட்ரஸைடு என்ற பயிர் வினையூக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 500 மி. கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். இதனால் சேமித்தலின் போது காய்கள் முளைப்பது தவிர்க்கப்பட்டு 6 முதல் 7 மாதங்கள் சேமிக்கவும் முடியும்
  • வெங்காயத்தாள் 50 சதவிகிதம் காய்ந்தவுடன் அறுவடையை தொடங்க வேண்டும். அறுவடை செய்த காய்களை மேல் தாள்களை நீக்கி 10-15 நாட்கள் நிழலில் உலர்த்திய பின்பு காற்றோட்டமுள்ள அறைகளில் சேமிக்க வேண்டும்

முட்டைக்கோசு

1. தரமான நாற்று உற்பத்தி:
பாதுகாப்பான நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுகளை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 720 கிலோவுடன் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா 1 கிலோ ஆகியவை கலந்து ஒரு குழித்தட்டு 1.25 கிலோ என்ற அளவில் ஊடகத்தை நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 250 கிராம் வீரிய ஒட்டு முட்டைக்கோசு விதைகள் தேவைப்படுகின்றது. விதைகளை 30 நிமிடம் 500 செல்சியஸ் வெப்பநிலைக் கொண்ட சுடுநீரில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லம் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைகளை குழிக்கு ஒன்று வீதம் விதைத்து ஒன்றன்மேல் ஒன்றாக தட்டுக்களை அடுக்கிவைத்து கருமைநிற பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடி விட வேண்டும்
  • ஐந்தாம் நாள் முளை வெளிவந்த அட்டைகளை எடுத்து நிழல்வலை நாற்றங்காலில் அடுக்கி வைத்து காலை, மாலை இரு நேரமும் நீர் ஊற்ற வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்கவேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச் சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்
  • 25 நாட்களில் முட்டைக்கோசு நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன்கள் தொழுவுரம் அடியரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியரமாக சூப்பர் பாஸ்பேட்டு உரத்தை ஒரு எக்டருக்கு 588.93 கிலோ என்றளவில் கடைசி உழவின்போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைத்து சொட்டுநீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 1 லி என்ற அளவில் முளைமுன் களைக்கொல்லியான ஃப்ளூக்ளோரலின் அல்லது டிரைஃப்ளூரலின் 0.5 லி தெளிக்க வேண்டும்
  • நாற்றுகளை 45 x 45 செ மீ என்ற இடைவெளியில் இரட்டை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 வது நாள் போக்கு நாற்றுக்களை நட்டு சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 200 : 125 : 150 கிலோ என்ற அளவில் உரப்பாசனம் மூலம் நீரில் எளிதில் கரையும் உரங்களைக் கொண்டு நடவு செய்தது முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் உரமிட வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டரக்கு 33 கிலோ என்ற அளவில் கார்போஃபுயூரான் மருந்தினை அடியரமாக இட வேண்டும்
  • சூடோமோனஸ் புளோரசன்ஸ் 0.5 சதக் கரைசலை நடவு செய்த 15 ஆம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆறு தடவை தெளிக்க வேண்டும்
  • களை வளர்ச்சியை பொறுத்து களையெடுக்க வேண்டும்
  • நுண்ணூட்ட கலவையை லிட்டருக்கு 21 கிராம் என்ற அளவில் நடவு செய்த 40, 60 மற்றும் 80 ஆம் நாளில் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடை பின்சேய் நேர்த்தி:

  • நன்கு வளர்ச்சியடைந்த முட்டைக்கோசு தலைப்பாகத்தை அறுவடை செய்து பெட்டிகளில் நிரப்பி எவ்வித சேதாரமும் இல்லாமல் சந்தைக்கு அனுப்ப வேண்டும்

பூக்கோசு

1. தரமான நாற்று உற்பத்தி:
பாதுகாப்பான நாற்றங்கால்:

  • நாற்றங்காலுக்கு 50 சதவிகித நிழல்வலை போதுமானது
  • 1 மீட்டர் அகலம் மற்றும் போதுமான நீளமுடைய மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நாற்றுகளை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும்
  • குழித்தட்டுகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு 720 கிலோவுடன் 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா 1 கிலோ ஆகியவை கலந்து நிரப்ப வேண்டும்

விதைத்தல்:

  • ஒரு எக்டருக்கு சுமார் 250 கிராம் வீரிய ஒட்டு பூக்கோசு விதைகள் தேவைப்படுகின்றது. விதைகளை 30 நிமிடம் 500 செல்சியஸ் வெப்பநிலை கொண்ட சுடுநீரில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் புளோரசன்ஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 100 கிராம் என்ற அளவில் அசோஸ்பைரில்லம் கலந்து அரை மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும்
  • ஐந்தாம் நாள் முளை வெளிவந்த அட்டைகளை எடுத்து நிழல்வலை நாற்றங்காலில் அடுக்கி வைத்து காலை, மாலை இரு நேரமும் நீர் ஊற்ற வேண்டும்
  • 3 சதவிகித (30 மிலி / லி) பஞ்சகாவ்யாவை விதைத்த 15 நாட்களுக்கு பின் தெளிக்கவேண்டும்
  • விதைத்த 18 நாட்களுக்கு பின் 19:19:19 மற்றும் 0.5 சதவிகித மாங்கனீசு கரைசலை ஊற்ற வேண்டும் அல்லது நுண்ணூட்டச் சத்து கலவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்றளவில் தெளிக்க வேண்டும்
  • 25 நாட்களில் பூக்கோசு நாற்றுகள் நடவுக்கு தயாராக இருக்கும்

2. நடவு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன்கள் தொழுவுரம் அடியரமாக இட்டு நன்கு உழ வேண்டும்
  • அடியரமாக சூப்பர் பாஸ்பேட்டு உரத்தை ஒரு எக்டருக்கு 586 கிலோ என்றளவில் கடைசி உழவின்போது இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடன் கலந்து கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்
  • நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப்பாத்திகளை 1 அடி இடைவெளியில் அமைத்து சொட்டுநீர்ப்பாசன பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
  • நடுவதற்கு 8-12 மணி நேரத்திற்கு முன் நடவு வயலை சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பின் மூலம் நனைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் எக்டருக்கு 1 லி என்ற அளவில் முளைமுன் களைக்கொல்லியான ஃப்ளூக்ளோரலின் அல்லது டிரைஃப்ளூரலின் 0.5 லி தெளிக்க வேண்டும்
  • நாற்றுகளை 60 x 45 x 45 செ மீ என்ற இடைவெளியில் இரட்டை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும்
  • 40 நாட்கள் வயதான நாற்றுக்களை 0.5 சதவிகித சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் கலவையில் 30 நிமிடங்கள் வைத்திருந்த பின்பு நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 வது நாள் போக்கு நாற்றுக்களை நட்டு சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 200 : 125 : 125 கிலோ என்ற அளவில் உரப்பாசனம் மூலம் நீரில் எளிதில் கரையும் உரங்களைக் கொண்டு நடவு செய்தது முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் உரமிட வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் 0.5 சதக் கரைசலை நடவு செய்த 15 ஆம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குறைந்து இரண்டு முறை தெளிக்க வேண்டும்
  • களை வளர்ச்சியை பொறுத்து நடவு செய்த 30 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • நுண்ணூட்டச் சத்துக் கலவையினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்றளவில் கலந்து நடவு செய்த 40, 60 மற்றும் 80 ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • நன்கு வளர்ச்சி பெற்ற பூக்கோசுகள் காலை அல்லது மாலை வேலைகளில் அறுவடை செய்து பெட்டிகளில் நிரப்பி எவ்வித சேதாரமும் இல்லாமல் சந்தைக்கு அனுப்ப வேண்டும்

தர்பூசணி

தரமான நாற்று உற்பத்தி:

  • தர்பூசணி நாற்றுக்களை 10 செ மீ சுற்றளவு மற்றும் 15 செ மீ உயரம் மற்றும் 200 காஜ் மொத்தமுடைய பாலிதீன் பைகளில் அல்லது குழித்தட்டுகளில் பாதுகாப்பான சூழ்நிலையில் உற்பத்தி செய்யலாம்
  • பாலிதீன் பைகளில் 1 : 1 : 1 என்ற சதவிகிதத்தில் செம்மண், மணல் மற்றும் தொழுவுரம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டசிம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். ஒரு எக்டர்க்கு 3.5 கிலோ விதைகள் தேவைப்படுகின்றது
  • விதைகளை நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் குழிக்கு ஒன்று என்ற அளவில் விதைத்து தட்டுக்களை நிழல்வலை நாற்றங்காலில் வைத்து காலை, மாலை இரு வேலைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்
  • 12 நாட்கள் வயதான ஆரோக்கியமான நாற்றுக்கள் நடவுக்கு ஏற்றதாகும்

2. நடவு வயல் தயாரிப்பு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு நன்கு உழத பின் சட்டிக் கலப்பை மற்றும் கொக்கிக் கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் மற்றும் 469 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரங்களை இடவேண்டும். சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் கலந்து இட வேண்டும்
  • சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களுக்கு இணையாக நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நடவு செய்வதற்கு முன் சுமார் 8-12 மணி நேரம் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்

3. நடவு:

  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • தர்பூசணி நாற்றுகளை 1.5 மீ x 60 செ மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்
  • நடவுக்கு முன்னர் முளைமுன் களைக் கொல்லியான பெண்டிமெத்தலின் எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்

4. கரையும் உரப்பாசனம்:

  • பயிர் நடவு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை ஒரு எக்டருக்கு 200 : 100 : 100 கிலோ என்ற அளவில் உரப்பாசன முறையில் கொடுக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • பயிர் நடவு செய்தது முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்ற அளவில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • நாற்று நடவு செய்த 30 ஆம் நாள் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்
  • தர்பூசணி கொடிகளில் முதல் இரண்டு இலைப்பருவத்தின் போது எத்ரல் என்ற பயிர் ஊக்கியினை 10 லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி என்ற அளவில் தெளிக்கலாம். அடுத்ததுத்து ஒரு வாரம் இடைவெளியில் மூன்று முறை தெளிப்பதன் மூலம் பயிர் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன் காய்பிடிப்புத்திறன் அதிகரிக்கும்
  • வைக்கோல் அல்லது காய்ந்த புல்லை பழங்களுக்கு அடியில் வைத்து பழங்கள் நேரடியாக மண்ணில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்

6. அறுவடை:

  • 5 முதல் 8 கிலோ எடையுடன் சிறந்த உருவம் மற்றும் அளவினை உடைய பழங்கள் அறுவடை செய்யப்பட் வேண்டும்
  • நன்கு வளர்ச்சியடைந்த பழங்கள் தட்டிப்பார்க்கும் போது ஒரு வித மந்தமான ஒலியினை எழுப்பும் மேலும் பழத்தில் ஒட்டியிருக்கும் கொடி காம்பு காய்ந்து விடும்
  • ஒரு எக்டருக்கு 45 முதல் 60 டன் பழங்கள் மகசூலாகப் பெறலாம். பழங்களை சீரான அளவுடைய அட்டைப் பெட்டிக

முலாம்பழம்

1. நாற்றங்கால் தயாரிப்பு:

  • முலாம்பழ நாற்றுக்களை 10 செ மீ சுற்றளவு மற்றும் 15 செ மீ உயரம் மற்றும் 200 காஜ் மொத்தமுடைய பாலிதீன் பைகளில் அல்லது குழித்தட்டுகளில் பாதுகாப்பான சூழ்நிலையில் உற்பத்தி செய்யலாம்
  • பாலிதீன் பைகளில் 1 : 1 : 1 என்ற சதவிகிதத்தில் செம்மண், மணல் மற்றும் தொழுவுரம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டசிம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். ஒரு எக்டர்க்கு 1 முதல் 1.5 கிலோ விதைகள் தேவைப்படுகின்றது
  • நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு ஊடகமாக பயன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு 250-300 கிலோ என்றளவில் பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவுடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 1 கிலோ கலக்கப்பட்ட 5 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து பயன்படுத்த வேண்டும்
  • ஒரு குழிக்கு ஒன்று என்ற அளவில் விதைத்து தட்டுக்களை நிழல்வலை நாற்றங்காலில் வைத்து காலை, மாலை இரு வேலைகளிலும் தண்ணீர் ஊற்ற வேண்டும்
  • 12 நாட்கள் வயதான ஆரோக்கியமான நாற்றுக்கள் நடவுக்கு ஏற்றதாகும்

2. நடவு வயல் தயாரிப்பு:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு நன்கு உழத பின் சட்டிக் கலப்பை மற்றும் கொக்கிக் கலப்பை கொண்டு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் மற்றும் 469 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரங்களை இடவேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ வீதமும் சுமார் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களுக்கு இணையாக நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும்
  • நடவு செய்வதற்கு முன் சுமார் 8-12 மணி நேரம் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • முலாம்பழ நாற்றுக்களை 1.5 மீ x 30 செ மீ என்ற இடைவெளியில் மேட்டுப்பாத்தியில் ஒற்றை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும்
  • நடவு செய்த 7 நாட்களுக்குள் போக்கு நாற்றுக்களை நடவு செய்து சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • பயிர் நடவு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை ஒரு எக்டருக்கு 200 : 100 : 100 கிலோ என்ற அளவில் உரப்பாசன முறையில் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • பயிர் நடவு செய்தது முதல் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்ற அளவில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • நாற்று நடவு செய்த 20 ஆம் நாள் களை எடுத்து மண் அணைக்க வேண்டும்
  • மேலும் இரண்டு கைகளைகள் எடுப்பதனால் வளர்ச்சிக்கு உதவுகின்றது
  • வைக்கோல் அல்லது காய்ந்த புல்லை பழங்களுக்கு அடியில் வைத்து பழங்கள் நேரடியாக மண்ணில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் நேரடியாக சூரிய ஒளி பட்டு பழங்கள் வாடாமல் இருக்க கொடிகளைக் கொண்டே மூடிவிட வேண்டும்
  • பழங்கள் முதிர்ச்சியடையும்போது 19-19-19 மற்றும் 5 கிராம் மாங்கனீசை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவிலும் ஒரு வாரம் கழித்து பொட்டாசியம் சல்பேட் 5 கிராம் / லிட்டர் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • பழங்கள் முதிர்ச்சியடைந்து சுமார் 5 கிலோ அளவிற்கு எடையுடன் நல்ல உருவம் அடைந்தவுடன் அறுவடை செய்யலாம்

10 கிலோ கொள் திறனுடைய அட்டைப் பெட்டிகளில் 5 முதல் 7 பழங்களை நிரப்பி இரகம் அல்லது வீரிய ஒட்டுரகத்தின் பெயர் விவசாயியின் பெயர், சந்தை முகவரி, அறுவடை தேதி, தரம், பெட்டி மற்றும் பழத்தின் எடை ஆகிய விபரங்களைக் கொண்ட அடையாளங்களையும் குறிக்க வேண்டும்.

சாம்பல் பூசணி மற்றும் பரங்கிக்காய்

1. தரமான நாற்றங்கால் தயாரிப்பு:
விதை அளவு: ஒரு எக்டருக்கு ஒரு கிலோ என்றளவில் பரங்கி விதைகளும் 2.5 கிலோ என்றளவில் சாம்பல் பூசணி விதைகளும் தேவைப்படுகின்றன

விதை நேர்த்தி: விதைகளை 500 கிராம் அசோஸ்பைரில்லத்துடன் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். விதைக்கும் முன்னர் விதைகளை 2 கிராம் தரம் அல்லது கார்பெண்டசிம் 2 கிராம் என்ற அளவில் ஒரு கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.

நாற்றங்கால் உற்பத்தி: நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்த வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைத்து தினமும் காலை, மாலை இருவேளையும் நீர் பாய்ச்ச வேண்டும். நிழல் வலை குடிலிலிருந்து பெறப்பட்ட 12 நாள் வயதுடைய ஆரோக்கியமான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

2. நடவு வயல் தயார் செய்தல்:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்து விட்டு அதன் பின் கொக்கிக் கலப்பை மூலம் இரண்டு முறை நன்கு உழவு செய்ய வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் மற்றும் 140 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ மற்றும் சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • விதை ஊன்றியது முதல் கடைசி அறுவடை வரை ஒரு எக்டருக்கு 60 : 30 : 30 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த பின் 15 நாட்கள் இடைவெளியில் 2 முதல் 3 முறை களையெடுக்க வேண்டும்
  • எத்ரல் என்ற பயிர் ஊக்கியினை 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் முதல் இரண்டு இலைப்பருவத்தின் போது தெளிக்க வேண்டும். இவ்வாறு அடுத்தடுத்து ஒரு வாரம் இடைவெளியில் மூன்று முறை தெளிப்பதன் மூலம் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து காய்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தலாம்

5. அறுவடை:

  • விதைத்த 85-90 நாட்களில் அறுவடை செய்யலாம்
  • நன்கு முற்றிய காய்கள் பழுத்து மஞ்சள் நிறமாக மாறுவதுடன் பழத்துடன் இணைந்த காம்பு காய்ந்து தனியாக பிரிந்து விடும். 20 முதல் 30 டன்கள் வரை ஒரு எக்டருக்கு மகசூல் பெறலாம்

பாகற்காய்

1. நாற்று உற்பத்தி:

  • பாகற்கொடி நேரடியாக நடவு வயலில் விதைக்கலாம் என்ற போதிலும் பாலித்தீன் பைகளில் நாற்றுவிட்டு நடுவதன் மூலம் அதிக அளவில் நடவு வயலில் விதை முளைக்காமல் அதிக இடைவெளி இருப்பதனை தடுக்க முடியும்.

பாலித்தீன் பை நாற்றங்கால்:

  • 10 செ மீ விட்டம் x 10 செ மீ உயரம் கொண்ட 200 காஜ் தடிமன் கொண்ட பாலித்தீன் பைகளை பாகற்காய் நாற்றுவிடுவதற்கு பயன்படுத்தலாம்
  • பாலித்தீன் பை நாற்றங்கால் மூலம் நாற்று விட்டு நடவு செய்ய ஒரு எக்டருக்கு 1.8 கிலோ விதைகள் போதுமானது. விதைகளை 500 கிராம் அசோஸ்பைரில்லத்துடன் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்
  • விதைப்பதற்கு முன்னர் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் திரம் மருந்தினைக் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • பாலித்தீன் பைகளில் 1 : 1 : 1 என்ற அளவில் மேல் மண், மணல் மற்றும் தொழுவுரம் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் விதைத்து நிழல் வலை நாற்றங்காலில் 15 நாட்கள் வைத்து பாதுகாக்க வேண்டும்
  • தினமும் காலை, மாலை இரு வேலையும் நீர் பாய்ச்ச வேண்டம்
  • 15 நாட்கள் வயதான ஆரோக்கியமான நாற்றுக்களை நடவு வயலில் நடவு செய்ய வேண்டும்

2. நடவு வயல் தயார் செய்தல்:

  • நடவு வயலை முதலில் உளிக்கலப்பை மற்றும் பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறை உழவு செய்ய வேண்டும். கொக்கிக் கலப்பை கொண்டு நான்கு முறை நன்கு உழவு செய்து அடியுரமாக ஒரு எக்டருக்கு 25 டன் கள் தொழுவரம் மற்றும் 470 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உள்ள உரங்களை எக்டருக்கு தலா 2கிலோ மற்றும் சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்
  • மேட்டுப்பாத்திகளை நான்கடி அகலம் மற்றும் ஒரு அடி உயரத்தில் சொட்டுநீர்ப்பாசன அமைப்பின் பக்கவாட்டுக் குழாய்களுக்கு இணையாக மூன்று அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். ந்விற்கு முன் சொட்டுநீர் பாசனம் மூலம் 8-12 மணி நேரங்கள் நடவு வயலை நன்கு நனைக்க வேண்டும்
  • நடவிற்கு முன் முளைமுன் களைக்கொல்லியான பெண்டிமெத்தலின் எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • நாற்றுக்களை 2 மீ இடைவெளியில் உள்ள துளைகளில் நட வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 200 : 100 : 100 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில் நடவு செய்த மூன்றாம் நாள் கடைசி அறுவடை வரை கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த இரண்டு வாரத்தில் 6 அடி உயரமுள்ள தைல மர குச்சிகள் சவுக்கு குச்சிகள் அல்லது மூங்கில் குச்சிகளைக் கொண்டு பந்தல் அமைத்து கொடிகளை எடுத்துக் கட்ட வேண்டும்
  • நடவு செய்தபின் 2-3 முறைகள் களையெடுக்க வேண்டும். 2 அடி அகலம் மற்றும் 1 அடி உயரம் உடைய பாத்திகள் அமையும் அளவிற்கு மண்ணணைக்க வேண்டும்
  • எத்ரல் என்ற பயிர் ஊக்கியினை 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 ஆம் நாள் முதல் வார இடைவெளிகளில் நான்கு முறை தெளிக்க வேண்டும்
  • ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் நடவு செய்த 30, 45 மற்றும் 60 ஆம் நாட்களில் நுண்ணூட்டக் கலவையினைத் தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • நடவு செய்த 45-50 ஆம் நாளிலிருந்து அல்லது விதைத்த 60-65 ஆம் நாளிலிருந்து அறுவடை செய்ய வேண்டும்
  • வாரம் ஒரு முறை என்றளவில் விதைகள் முதிர்ச்சியடையும் முன்பே காய்கள் அறுவடை செய்யப்பட வேண்டும்
  • மொத்தம் 8-10 அறுவடைகள் செய்யலாம்
  • ஒரு எக்டருக்கு சராசரியாக 10-15 டன்கள் வரை இரகங்கள் அல்லது வீரிய ஒட்டு இரகங்களைப் பொறுத்து மகசூல் பெறலாம்

சுரைக்காய்

1. நடவு வயல் தயார் செய்தல்:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் தொழுவரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 470 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும். மேலும் அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 2கிலோ சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ ஆகியவற்றை 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • அகலப் பாத்திகளை நான்கடி அகலம் மற்றும் ஒரு அடி உயரத்தில் சொட்டுநீர்ப் பாசன அமைப்பின் பக்கவாட்டுக் குழாய்களுக்கு இணையாக மூன்று அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்

2. விதை நேர்த்தி:

  • ஒரு எக்டருக்கு சுமார் 3 கிலோ விதைகள் போதுமானது
  • ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற அளவில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்ந்த வேண்டும்
  • விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்

3. நாற்றங்கால் தயாரிப்பு:

  • நிழல்லலை குடிலிருந்து பெறப்பட்ட 15 நாட்கள் வயதுடைய ஆரோக்கியமான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்த வேண்டும். நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்த வேண்டும். நாற்றுக்களை பாலிதீன் பைகளிலும் வளர்க்கலாம். ஒரு குழிக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைத்து தினமும் காலை, மாலை இருவேலையும் நீர் பாய்ச்ச வேண்டும் 15 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்தலாம்

4. நடவு அல்லது நேரடி விதைப்பு:

  • நடவிற்கு முன் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்.
  • பெண்டிமெத்தலின் என்ற முளைமுன் களைக்கொல்லியை எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • நாற்றுக்களை அல்லது விதைகளை 60 செ மீ இடைவெளியில் உள்ள துளைகளில் நட வேண்டும்

5. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 200 : 100 : 100 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில் நடவு செய்த மூன்றாம் நாள் முதல் பயிர்க்காலம் முழுதும் கொடுக்க வேண்டும்

6. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த பின் 2-3 முறைகள் 15 நாட்களுக்கு ஒரு முறை களையெடுக்க வேண்டும்
  • மழைக்காலங்களில் குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து கொடிகள் எடுத்து கட்டி பழங்கள் அழுவதையும் நேரடியாக மண்ணில் படுவதையும் தவிர்க்க வேண்டும்

7. அறுவடை:

  • நன்கு வளர்ச்சியடைந்த முழு அளவுடைய ஆனால் காய் முதிர்ச்சியடையும் முன்பு கையினால் அழுத்திப்பார்த்து அறுவடை செய்ய வேண்டும்
  • இரகங்கள் அல்லது வீரிய ஒட்டு இரகங்களுக்கு ஏற்ப நடவு செய்த 50 முதல் 120 ஆம் நாள் முதல் அறுவடை செய்யப்படும்
  • ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன்கள் மகசூல் பெறலாம்

பீர்க்கங்காய்

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு நான்கு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் தொழுவரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 470 கிலோ இடவேண்டும்.
  • மேலும் அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 2கிலோ வீதம் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்

2. விதைப்பு:

  • ஒரு எக்டருக்கு 1.5 - 2.0 கிலோ என்ற அளவில் விதை தேவை
  • விதைகளை 500 கிராம் அசோஸ்பைரில்லத்துடன் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்ந்த வேண்டும்
  • விதைப்பதற்கு முன் ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • 1.5 மீ இடைவெளியில் அமைக்கப்பட்ட வரிசைகளில் 45 x 45 x 45 செ மீ என்ற அளவில் 2 மீ இடைவெளயில் குழிகளைத் தோன்ற வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 2கிலோ சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ ஆகியவற்றை 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்

விதைப்பு: ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்த பின் ஆரோக்கியமான 3 நாற்றுக்களை விட்டு மீதமுள்ள 2 நாற்றுக்களை அகற்றிவிட வேண்டும். நேரடியாக விதைப்பதற்கு பதிலாக பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைத்து முளைத்த 15 ஆம் நாளில் நடவு செய்யலாம். இவற்றை ஒரு குழிக்கு 2 நாற்றுகள் என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும்.

3. கரையும் உரப்பாசனம்:

  • நடவு முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 250 : 100 : 100 கிலோ என்ற அளவில் பிரித்து உரப்பாசனம் மூலம் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுதும் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளம் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த அல்லது நடவு செய்தது முதல் தினமும் 1-2 மணி நேரங்கள் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • பற்றிழைகள் வளர ஆரம்பித்தவுடன் குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து கொடிகளை எடுத்து கட்டி படரவிட வேண்டும்.
  • 15 நாட்களுக்கு ஒரு முறை 2-3 முறைகள் களையெடுக்க வேண்டும்
  • இரண்டு இலைகள் தோன்றியவுடன் ஒரு வார இடைவெளியில் எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம் என்ற அளவில் மூன்று முளை தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • விதைத்த 55-60 ஆம் நாள் முதல் அறுவடை ஆரம்பமாகும்
  • நன்கு வளர்ச்சியடைந்த பீர்க்கன் காய்களை ஒரு வார இடைவெளியில் 8 முதல் 10 அறுவடைகள் செய்யலாம்
  • நோய் தாக்குதல் மற்றும் உருமாற்றம் உடைய காய்களை தனியே பிரித்து தரம் பிரிக்க வேண்டும். காய்களை பெட்டிகளில் நிரப்பி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும்

சீமை வெள்ளரி

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் தொழுவரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 350 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 2கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்

விதைப்பு:

  • விதைப்பதற்கு முன் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்
  • விதைகளை மேட்டுப்பாத்தியில் 22.5 செ மீ இடைவெளியில் மேட்டுப்பாத்திகளின் நடுமையத்தில் விதைக்க வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • விதைப்பு முதல் அறுவடை வரை எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை 150 : 75: 100 கிலோ என்ற அளவில் மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனம் கொடுக்க வேண்டும்

4. பயிர் வளம் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த நாள் முதல் தினமும் 1-2 மணி நேரங்கள் மண்ணின் ஈரப்பதத்தை பொறுத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்
  • விதைத்த 15, 30 மற்றும் 45 ஆம் நாட்களில் களையெடுக்க வேண்டும்
  • மூங்கில், தைல மர, சவுக்கு அல்லது பாக்கு மர குச்சிகளைக் கொண்டு பந்தல் அமைத்து கொடிகளை சணல் கொண்டு கட்டி விட வேண்டும்
  • கோடைக்காலத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் காயத்தினை தவிர்ப்பதற்காக அதிகாலை அல்லது பின் மாலைகளில் அறுவடை செய்யப்பட வேண்டும்

5. அறுவடை:

  • விதைத்த 30 முதல் 35 நாட்களில் முதல் அறுவடை தொடங்கும்
  • மிகவும் சிறிய அளவிலுள்ள சீமை வெள்ளரி காய்களே முதல் தரமாக தரம்பிரிக்கப்பட்டு அதிக விலை பெறுவதால் தினமும் அறுவடை செய்ய வேண்டும்
  • ஒரு நாள் அறுவடை செய்யாமல் விட்டுவிட்டாலும் அளவு அதிகமாகி தரம் குறைந்துவிடும்
  • அறுவடை செய்யப்பட்ட காய்கள் நிழலில் சுத்தமான தரை அல்லது ப்ளாஸ்டிக் தாளின் மீது வைக்கப்பட வேண்டும்
  • காய்களுடன் இணைந்திருக்கும் காம்புகள் மற்றும் பூத்தலைகளை நீக்க வேண்டும்
  • காய்களின் தரத்தினை காப்பதற்காக அறுவடை செய்தவுடன் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும்

தரக் குறியீடு

தரம் (ஒரு கிலோ காய்களின் எண்ணிக்கை)

காய்களின் எடை

பெரிய காய்கள்

சிறிய காய்கள்

1.

250 +

4.0 கிராம்

-

2.

150-250

6.6 கிராம்

4.0 கிராம்

3.

120-150

8.3 கிராம்

6.6 கிராம்

4.

80-120

12.5 கிராம்

8.3 கிராம்

புடலை

1. விதை அளவு:

  • ஒரு எக்டருக்கு 1.5 - 2 கிலோ விதைகள் தேவைப்படுகின்றது.

2. விதை நேர்த்தி:

  • ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் அசோஸ்பைரில்லம் என்ற அளவில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு கிலோ விதையுடன் திரம் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

3.நாற்றங்கால் தயாரிப்பு:

  • நாற்றுகளை நன்கு பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்தி குழித்தட்டுகளில் வளர்க்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு விதை என்ற கணக்கில் விதைத்து தினமும் காலை மாலை இருவேலையும் நீர் பாய்ச்ச வேண்டும். சுமார் 12 நாட்கள் வயதான நாற்றுக்களை நடவிற்கு பயன்படுத்தலாம்.

4. நடவு வயல் தயாரித்தல்:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 470 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • மேலும் அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 2கிலோ சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸ் எக்டருக்கு 2.5 கிலோ ஆகியவற்றை 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஐந்து அடி இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன அமைப்பின் பக்கவாட்டு குழாய்களுக்கு இணையாக அமைக்க வேண்டும்
  • நடவிற்கு முன் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்.
  • நாறடறுக்களை 60 செ. மீ இடைவெளியில் உள்ள துளைகளில் நட வேண்டும்.

5. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 75 : 100 : 100 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனம் முறையில் நடவு செய்த மூன்றாம் நாள் முதல் பயிர்காலம் முழுதும் கொடுக்க வேண்டும்

6. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • பற்றிழைகள் வளர ஆரம்பித்தவுடன் குச்சிகள் மூலம் பந்தல் அமைத்து கொடிகளை எடுத்து கட்டி படரவிட வேண்டும். 2 முதல் 3 முறைகள் களையெடுக்க வேண்டும்
  • விதைத்த 10 முதல் 15 நாட்களுக்கு பிறகு இரண்டு இலைகள் தோன்றியவுடன் ஒரு வார இடைவெளிகளில் எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் தண்ணீருக்கு 1 மி.லி என்ற அளவில் நான்கு முறை தெளிக்க வேண்டும்

7. அறுவடை:

  • விதைத்த 65-70 ஆம் நாள் முதல் அறுவடை ஆரம்பமாகும். நன்கு வளர்ச்சியடைந்த காய்களை 5-7 நாட்கள் இடைவெளியில் 8-10 அறுவடைகள் செய்யலாம். நோய் தாக்குதல் மற்றும் உருமாற்றம் உடைய காய்களை தனியே பிரித்து தரம் பிரிக்க வேண்டும். காய்களை பெட்டிகளில் நிரப்பி சந்தைக்கு எடுத்து செல்ல வேண்டும்

வெள்ளரி

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 350 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • மேலும் அடியுரமாக அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு எக்டருக்கு தலா 1கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்

2. விதைப்பு:

  • ஒரு எக்டருக்கு சுமார் 2 கிலோ விதைகள் தேவை

விதை நேர்த்தி:

  • விதைகளுடன் அசோஸ்பைரில்லம் 500 கிராம் என்ற அளவில் கலந்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். ஒரு கிலோ விதையுடன் திரம் 4 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • விதைப்பதற்கு முன் சொட்டுநீர்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்
  • விதைகளை 60 செ. மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்
  • விதைகளை பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் விதைத்து நடவு வயலில் விதை முளைகாததால் ஏற்பட்ட சந்துக்களை நிரப்பவேண்டும்
  • முளைமுன் களைக்கொல்லியான ஃப்ளுக்ளோரலின் 1 கிலோ செயற்கூறு அல்லது மெட்டலாக்ளோர் 0.75 கிலோ செயற்கூறு உள்ளதை நடவு செய்த மூன்றாம் நாள் தெளிக்க வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • வீரிய ஒட்டு வெள்ளரிக்கு, விதைத்த நாள் முதல் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் ஒரு எக்டருக்கு 150 :75 : 75 கிலோ தழை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனமாகக் கொடுக்க வேண்டும். இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக வழங்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • களைகளின் வளர்ச்சிக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒரு முறை 2 அல்லது 3 முறைகள் களையெடுக்க வேண்டும். விதைத்த 30 மற்றும் 45 வது நாளில் மண் அணைக்க வேண்டும்
  • பெண் பூக்கள் உற்பத்தியினை அதிகப்படுத்துவதற்கு விதைத்த 15 ஆம் நாள் முதல் வார இடைவெளியில் எத்ரல் 2.5 மி. லி என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து 4 முறை தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • விதைத்த 45 ஆம் நாள் முதல் அறுவடை செய்ய வேண்டும்
  • இளம்பிஞ்சுகளை அறுவடை செய்யும்போது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் அறுவடை செய்யலாம்
  • சுமார் 8 முதல் 10 அறுவடைகளை செய்து 8-10 டன்கள் இளம்பிஞ்சுகள் ஒரு எக்டருக்கு 80-90 நாட்களில் மகசூல்கள் பெறலாம்

பிரஞ்சு பீன்ஸ்

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 633 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2கிலோ மற்றும் சூடோமோனாஸ் 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்

2. விதைத்தல்:

  • விதைப்பதற்கு முன் சொட்டுநீர்பாசனம் மூலம் நிலம் முழுதும் சுமார் 8-12 மணி நேரங்கள் நன்கு நீரால் நனைக்க வேண்டும்
  • களைகளைக் கட்டுப்படுத்துவதற்கு விதைப்பதற்கு முன் பேசிலின் எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • குத்து இரகங்களாகு இருப்பின், விதைகளை 30 x 30 x 15 செ மீ என்ற இடைவெளியில் மலைப்பகுதிகளிலும் 30 x 30 x 45 செ.மீ என்ற இடைவெளியில் சமமட்ட பகுதிகளிலும் இரட்டை வரிசை முறையில் விதைக்க வேண்டும்
  • கொடி இரகங்களை 120 x 30 x 20 செ மீ என்ற இடைவெளியில் இரட்டை வரிசை முறையில் விதைக்க வேண்டும்
  • ஒரு எக்டருக்கு குத்து இரகமாக இருந்தால் 85 கிலோ விதையும் கொடி இரகமாக இருந்தால் 30-40 கிலோ விதையும் தேவை
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் என்ற அளவில் ரைசோபியம் நுண்ணுயிர் உரத்துடன் சோற்றுக் கஞ்சி வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • எக்டருக்கு 135 : 135 : 135 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனம் கொடுக்க வேண்டும் இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • நீர்ப்பாசனம்: விதைத்த நாள் முதல் தினமும் ஒரு மணிநேரம் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்
  • விதைத்த 30 ஆம் நாள் களையெடுக்க வேண்டும். அதன்பின் களை வளர்ச்சியினைப் பொறுத்து 45 மற்றும் 60 ஆம் நாளில் களையெடுக்க வேண்டும். களையெடுத்தவுடன் மண் அணைக்க வேண்டும்
  • கொடி வகை இரகங்களுக்கு விதைத்த 2 ஆம் நாள் குச்சிகளை நட்டு கொடிகளை எடுத்துக்கட்ட வேண்டும்

5. அறுவடை:

  • காய்களுக்காக அறுவடை செய்யும் போது நார்கள் உருவாகும். முன்பே அறுவடை செய்ய வேண்டும். பயிறுகளுக்கு அறுவடை செய்யும்போது நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்துபின் பயிறுகளை எடுக்க வேண்டும்
  • இரகங்கள் மற்றும் பராமரிப்பனைப் பொறுத்து குத்து இரகங்களில் 9-10 டன் மகசூலும் கொடி இரகங்களில் 12-15 டன்கள் வரை மகசூலும் பெறலாம்
  • பயிறு மகசூலானது 1.5-2.0 டன்கள் வரை ஒரு எக்டருக்கு மகசூலாக பெறலாம்

பீட்ரூட்

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 810 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2கிலோ மற்றும் சூடோமோனாஸ் 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்

2. விதைத்தல்:

  • விதைகளை 30 x 30 x 10 செ.மீ என்ற இடைவெளியில் மேட்டுப்பாத்திகளில் இரட்டை வரிசை முறையில் ஒரு பாத்திக்கு நான்கு வரிசை என்ற அளவில் ஊன்ற வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 6 கிலோ விதைகள் தேவை
  • விதைத்தவுடனே சொட்டு நீர்பாசன அமைப்பு மூலம் சுமார் 8 -12 மணி நேரம் மண்ணின் தன்மையைப் பொருத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • விதைத்த நாள் முதல் ஒரு எக்டருக்கு 120 :160 : 100 கிலோ என்றளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை உரப்பாசன முறையில் மூன்று நாட்கள் இடைவெளியில் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் கொடுக்க வேண்டும். இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த நாள் முதல் தினமும் 1-2 மணிநேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • விதைத்த 15 ஆம் நாளில் களையெடுத்து மண் அணைக்க வேண்டும்
  • செடிகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு செடிகளை இரண்டு முறை களைத்துவிட வேண்டும்

5. அறுவடை:

  • விதைத்த 70 முதல் 100 நாட்களுக்குள் இரகத்தைப் பொறுத்து கிழங்குகளை அறுவடை செய்யலாம்
  • முதிர்ச்சியடைந்த கிழங்குகளை செடியுடன் சேர்த்து அறுவடை செய்து நீரில் கழுவியபின் இலைகளை அகற்ற வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன்கள் வரை மகசூல் பெறலாம்

முள்ளங்கி

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 500 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2கிலோ மற்றும் சூடோமோனாஸ் 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்

2. விதைத்தல்:

  • விதைகளை மேட்டுப்பாத்தியில் 30 x 15 x 10 செ.மீ என்ற இடைவெளியில் ஒரு பாத்திக்கு 10 வரிசை என்ற முறையில் நடவு செய்ய வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் தேவை
  • விதைத்தவுடனே சொட்டு நீர்ப்பாசன முறையில் 8 -12 மணி நேரம் நீர்ப்பாய்ச்சி நிலம் முழுவதும் நன்கு நனையும்படி செய்ய வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 50 : 100 : 50 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனம் கொடுக்க வேண்டும் இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த 10 ஆம் நாள் குத்துக்கு ஒரு செடி மட்டுமே இருக்கும்படி களைத்து விடவேண்டும்
  • விதைத்த 15 ஆம் நாளில் களையெடுத்து மண் அணைக்க வேண்டும்

5. அறுவடை:

  • விதைத்த 7 வாரங்களில் முள்ளங்கி அறுவடைக்கு வரும்
  • வேர்க்கிழங்குகளை செடியோமு பிடுங்கி சுத்தமான தண்ணீரில் மண் நீங்குமாறு கழுவி தரம்பிரிக்கப்பட்டு பின் சந்தைக்கு அனுப்ப வேண்டும்

மரவள்ளி

1. நாற்றங்கால் தயாரிப்பு:

  • நடவுக்கு ஏற்ற விதைக்குச்சிகளை நன்கு வளர்ச்சியடைந்த நச்சுயிரி தாக்குதல் இல்லாத மரவள்ளி தண்டின் நடுப்பகுதியிலிருந்து வெட்டி எடுக்க வேண்டும்
  • ஒவ்வொரு நடவுக்குச்சியும் 15 செ.மீ நீளம் மற்றும் 8 முதல் 10 பருக்கள் கொண்டிருக்க வேண்டும்
  • நடவுக்குச்சியில் எவ்வித காயமும் ஏற்படாமல் வெட்டுப்பகுதியானது ஒரே சீராகவும் இருக்க வேண்டும்
  • நடவுக்குச்சியின் நுனியை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பெண்டாசிம் என்ற அளவில் உள்ள கரைசலில் 10 நிமிடம் உறவைத்து பின் நடவு செய்ய வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 20,000 நடவுக்குச்சிகள் தேவை
  • நடவு குச்சிகளின் அடி நுனியை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 கிராம் என்றளவில் உள்ள கரைசலில் 20 நிமிடம் நனைத்து பின் பதியம் வைக்க வேண்டும்
  • மானாவாரி சாகுபடிக்கு, பொட்டாசியம் க்ளோரைடு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் மற்றும் துத்தநாக சல்ஃபேட் மற்றும் ஃபெர்ரஸ் சல்ஃபேட் 5 கிராம் என்றளவில் கரைத்து நடவுக்குச்சிகளை 20 நிமிடங்களுக்கு நேர்த்தி செய்ய வேண்டும்

2. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 422 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 2.5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் மற்றும் 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றை கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்
  • நடவுக்கு முன் 8-12 மணி நேரத்திற்கு சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • முளைமுன் களைக்கொல்லியான பெண்டிமெத்தலின் ஒரு எக்டருக்கு 1 கிலோ செயற்கூறு என்ற அளவில் இட வேண்டும்
  • 20 நாள் முளைத்திருக்கும் ஆரோக்கியமான குச்சிகளை தேர்வு செய்து 90 x 60 x 90 செ மீ என்ற இடைவெளியில் இரண்டு வரிசை முறையில் மேட்டுப்பாத்தியில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 நாட்கள் கழித்து போக்கு குச்சிகளை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 90 : 90 : 240 கிலோ என்ற அளவில் ஐந்து நாட்கள் இடைவெளியில் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் உரப்பாசனம் முறையில் கொடுக்க வேண்டும் இதில் 75 சதவிகித மணி சத்தை அடியுரமாக கொடுக்க வேண்டும்
  • குச்சிகளை நடவு செய்தபின் தினமும் ஒரு மணி நேரம் என்றளவில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • நடவு செய்த 30 ஆம் நாள் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். மறுபடியும் தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும்
  • நடவு செய்த 60 ஆம் நாள் ஒரு செடிக்கு இரண்டு கிளைகளை மட்டுமே விட்டு மற்றவற்றை வெட்டிவிட வேண்டும்
  • நடவு செய்த 30, 60 மற்றும் 90 ஆம் நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பத்து கிராம் பெரஸ் சல்பேட் மற்றும் 5 கிராம் துத்தநாக சல்பேட் ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை கலந்து தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • கிழங்குகள் முதிர்ச்சியடைந்து விட்டதை நிலத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் 50 சதவிகித இலைகள் பழுப்பதின் மூலமும் தெரிந்து கொள்ளலாம். அறுவடைக்கு முதல் நாள் நீர்ப்பாசனம் செய்வதனால் எவ்வித சேதாரமும் கிழங்குகளுக்கு ஏற்படாது. தண்டு குச்சிகளை நிழலில் பாதுகாத்து நடவிற்கு பயன்படுத்தலாம்

உருளைக்கிழங்கு

1. விதை கிழங்கு தேர்வு மற்றும் நேர்த்தி:

  • கிழங்குகளிலிருந்தே உருளைக் கிழங்குகள் பயிர் பெருக்கம் செய்யப்படுகின்றது. நோய் தொற்று இல்லாத நடவு வயல் அல்லது இடத்திலிருந்தே விதைக்கிழங்குகளை தேர்வு செய்ய வேண்டும்
  • கிழங்குகள் ஒவ்வொன்றும் குறைந்த பட்சம் ஒரு பரு கொண்டதாக இருக்க வேண்டும்
  • விதை கிழங்குகளை வெட்டிய பிறகு அவற்றை 10 முதல் 150 செ மற்றும் 85-95 சதவிகித ஈரப்பதத்தில் 4-6 நாட்கள் வைத்திருக்க வேண்டும்
  • விதை கிழங்குகளை ஒரு லிட்டருக்கு 25 மி.லி என்ற அளவில் ஜிப்ரலிக் அமிலம் கரைசலில் ஒரு மணி நேரம் நேர்த்தி செய்து நிழலில் உலர்த்த வேண்டும். உலர்த்த கிழங்குகள் குருத்து விடுவதற்காக சணல் பைகளில் நிரப்பி நல்ல காற்றோட்டமுள்ள அறையில் 10 நாட்களுக்கு நேராக நிறுத்தி வைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் விதைக்கழங்குகளை ப்ளீச்சிங் தூள் கரைசலில் நனைக்க வேண்டும்

2. நடவு முறை மற்றும் பயர் எண்ணிக்கை பராமரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு தொழுவுரம் 25 டன் கள் மற்றும் 1171.88 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 2கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமுடைய மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசனக் குழாய்களை மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்
  • நடவுக்கு முன் 8-12 மணி நேரத்திற்கு சொட்டுநீர்ப்பாசனம் மூலம் நீர்ப்பாய்ச்ச வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 1500-2000 கிலோ விதைக் கிழங்கு தேவை
  • விதைக்கழங்குகளை 60 x 30 x 20 செ.மீ என்ற இடைவெளியில் மேட்டுப்பாத்தியில் இரண்டு வரிசை சந்துக்களை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • ஒரு எக்டருக்கு 120 : 240 : 120 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் முறையில் கொடுக்க வேண்டும் இதில் 75 சதவிகித மணி சத்தை அடியுரமாக கொடுக்க வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • நடவு செய்தவுடன் ஒரு எக்டருக்கு முளைமுன் களைக்கொல்லியான லினூரன் 900 லிட்டர் தண்ணீரில் 0.5 கிலோ அல்லது நிஃபன் 900 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் என்ற அளவில் தெளித்து உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும்
  • நடவு செய்த 20 முதல் 25 நாட்களில் தண்டுகள் அடிக்கணுவிலிருந்து தோன்றும். இத்தண்டுகள் மண்ணிற்குள் வளர்ந்து சென்று நடவு செய்த 35 நாட்களில் கிழங்குகள் அதன் நுனிகளில் தோன்றும்
  • இப்பருவத்தில் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும். மண் அணைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் கிழங்குகளில் பசுமை நிறத்தை ஏற்படுத்தும் சூரியவெளிச்சத்திலிருந்து கிழங்குகளை பாதுகாக்கலாம்
  • உறைப்பனியால் ஏற்படும் சேதமும் தவிர்க்கப்படுகின்றது. மண்ணணைப்பு செய்த 30 நாட்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக மண் அணைக்க வேண்டும்
  • நடவு செய்த நாள் முதல் சொட்டு நீர்ப்பாசன முறையில் தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்

அறுவடை மற்றும் அறுவடை நேர்த்தி:

  • கிழங்குகள் நன்கு முதிர்ச்சியடைந்தவுடன் அறுவடை செய்வதற்கு 15 நாட்கள் முன்னதாக கொடிகளை அறுத்துவிட்டு நீர்ப்பாசனத்தை நிறுத்தி விட வேண்டும்
  • கிழங்குகளை அறுவடை செய்து நிழலில் குவியலாக குவித்து வைத்து அவற்றின் மீதுள்ள மண் காய்ந்து உதிரவைத்து பின் பூச்சி நோய்களால் தாக்கப்பட்ட கிழங்குகளை நீக்கித் தரம் பிரிக்க வேண்டும். கிழங்குகளை பெரிது, மிதமானது, சிறியது மற்றும் மிகச் சிறியது என்று நான்கு தரங்களாக பிரிக்க வேண்டும்
  • நன்கு பராமரிக்கப்பட்ட வயலில் ஒரு எக்டருக்கு 35-40 டன்கள் வரை மகசூல் எடுக்கலாம்

மஞ்சள்

1. நடவு வயல் தயாரிப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு மூன்று முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் தொழுவுரம் 25 டன் கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 281 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் இடவேண்டும்.
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் முறையே 2கிலோ வீதம் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்
  • விதை ஊன்றுவதற்கு 8-12 மணி நேரம் முன்பாக மேட்டுப்பாத்திகளை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் முழுவதும் நனைக்க வேண்டும்

2. விதை மஞ்சள் நேர்த்தி மற்றும் நடவு:

  • ஒரு எக்டருக்கு சுமார் 200 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகின்றது
  • கிழங்குகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 10 கிலோ என்றளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • விதை ஊன்றுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக கார்பண்டாசிம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் நனைத்து பின் உலர்த்தி நடவு செய்ய வேண்டும்
  • விதை மஞ்சளை மேட்டுப்பாத்தியில் மூன்று வரிசை முறையில் 60 x 45 x 15 செ.மீ என்ற இடைவெளியில் ஊன்ற வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • விதைத்த நாள் முதல் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் ஒரு எக்டருக்கு 150 :60 : 108 கிலோ என்றளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை ஐந்து நாட்கள் இடைவெளியில் உரப்பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த 30 ஆம் நாளிலும் அதன்பிறகு தேவைப்படும் பொழுதும் களையெடுக்க வேண்டும்
  • விதைத்த 60 மற்றும் 120 ஆம் நாட்களில் மண் அணைக்க வேண்டும்
  • விதைத்த 60 மற்றும் 90 ஆம் நாட்களில் பெரஸ் சல்பேட் 375 கிராம், துத்தநாக சல்பேட் 375 கிராம், போராக்ஸ் 375 கிராம், யூரியா 375 கிராம் ஆகியவற்றை 250 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு எக்டருக்கு தெளிக்க வேண்டும்

5. அறுவடை:

  • இலைகள் பழுத்து காய்ந்து மடியத் தொடங்கும்போது அறுவடை செய்ய வேண்டும்
  • மஞ்சள் கிழங்குகளை எவ்வித சேதாரமும் இல்லாமல் அகற்றி எடுத்து விதை மஞ்சளை மணலுடன் கலந்து பகுதி நிழலில் சேமித்து வைக்க வேண்டும்

கொத்துமல்லி

1. விதை அளவு மற்றும் நேர்த்தி:

  • ஒரு எக்டருக்கு விதைக்க தேவைப்படும் 10 கிலோ விதைகளை விதைக்கும் முன்னர் இரண்டாக உடைத்து கொள்ள வேண்டும்
  • விதைகளை அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஒரு எக்டரக்கு 1.5 கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்து அரை மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும்
  • வாடல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விதைக்கும் முன் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்து உலர்த்தி பின் விதைக்க வேண்டும்

2. நடவு வயல் தயாரிப்பு மற்றும் விதைப்பு:

  • நிலத்தை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்.
  • கடைசி உழவுக்கு முன் 25 டன் கள் ஒரு எக்டருக்கு என்ற அளவில் தொழுவுரம் இடவேண்டும்.
  • ஒரு எக்டருக்கு 200 கிலோ சூப்பர் பாஸ்பேட் அடியுரமாக இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா தலா 2கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்
  • விதைகளை 15 செ.மீ இடைவெளியில் கோடு கிழித்து வரிசையாக ஒரு மேட்டுப்பாத்திக்கு 8 வரிசை என்ற அளவில் விதைக்க வேண்டும்
  • முதல் நீர்ப்பாசனம் சொட்டு நீர் மூலம் சுமார் 8-12 மணி நேரம் நிலம் நன்கு நனையும் வரை மண்ணின் தன்மையினைப் பொறுத்து தர வேண்டும்
  • போக்கு நாற்றுக்களால் உருவான சந்துக்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 60 :40 : 60 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை உரப்பாசனம் முறையில் கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

4. பயிர் வளர் இடைத்தொழில் நுட்பம்:

  • விதைத்த 20 ஆம் நாளில் களையெடுக்க வேண்டும்
  • விதைத்த 30 ஆம் நாள் செடிகளைக் களைத்துவிட வேண்டும்

5. அறுவடை:

  • இலைகளின் முதல் அறுவடையை விதைத்த 20 முதல் 25 நாட்களிலும் அதன்பின் 30 மற்றும் 40 ஆம் நாட்களிலும் செய்ய வேண்டும்
  • செடிகளை மண்ணிலிருந்து அகற்றி எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிய பின் சணல் பைகளில் நிரப்ப வேண்டும்

வாழை

நல்ல வடிகால் வசதியுள்ள இருபொறை மண் வாழை பயிரிட மிகவும் உகந்தது. வாழையின் இரகம் மற்றும் இடத்தினை பொறுத்து பயிரிடும் பருவம் வேறுபடுகின்றது. சிறந்த நடவுப் பருவம் கீழ்வருமாறு அமைகின்றது.

நனடசெய்

:

பிப்ரவரி - ஏப்ரல் : பூவன், இரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் நெய்பூவன்.

ஏப்ரல் - மே

:

நேந்திரன் மற்றும் ரொபஸ்டா

தோட்ட நிலம்

:

ஜனவரி - பிப்ரவரி மற்றும் நவம்பர் - டிசம்பர்

படுகை நிலம்

:

ஜனவரி - பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் - செப்டம்பர்

மலை வாழை

:

கீழ் பழனி மலைகள் - ஏப்ரல் - மே

சிறுமலை

:

ஜீன் - ஆகஸ்ட்

கன்றுகலை தேர்வு செய்தல்:

  • நோய் தாக்குதல் நூற்புழு மற்றும் பிற பூச்சிகள் இல்லாத ஆரோக்கியமான வாழைத் தோப்பில் 1.5 - 2.0 கிலோ எடையுள்ள கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்
  • திசு வாழைக் கன்றுகளைத் தேர்வு செய்யும்போது 5-6 இலைகள் உள்ள நன்கு வளர்ந்த ஆரோக்கியமான செடிகளைத் தேர்வு செய்ய வேண்டும்

2. கன்று நேர்த்தி:

  • கன்றுகளிலிருந்து வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை நீக்கிவிட்டு கிழங்குகிலிருந்து 20 செ.மீ அளவிற்கு மேற்புறம் விட்டுவிட்டு மீதிப் பகுதியினை வெட்டி எடுத்துவிட வேண்டும்
  • வாடல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த கார்பென்டாசம் 0.1 சதக் கரைசலில் ஐந்து நிமிடம் ஊறவைக்க வேண்டும்
  • நூற்புழு தாக்குதலினைக் கட்டுப்படுத்த 4 பங்கு களிமண் மற்றும் 5 பங்கு நீருடன் சேர்த்து கரைத்த சேற்றில் கன்றுகளை நனைத்து ஒரு கன்றுக்கு 40 கிராம் என்ற அளவில் கார்போபியூரான் 3 G குருணை மருந்தினை கன்றில் தூவி பின் நடவு செய்ய வேண்டும்
  • இதற்கு பதில் கன்றுகளை 0.75 சதவிகித மோனோக்ரோட்டோபாளில் நனைத்து குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு நிழலில் உலர்த்திய பின்னும் நடவு செய்யலாம்

3. நடவு வயல் தயாரிப்பு மற்றும் நடவு:

  • நடவு வயலினை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்
  • 60 செ.மீ அகல முடைய மேட்டுப்பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனத்தின் பக்கவாட்டு குழாய்களுக்கு இணையாக அமைக்க வேண்டும்
  • நடவிற்கு ஒரு மாதம் முன்பே 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகளை 1.8 மீ இடைவெளியில் எடுக்க வேண்டும்
  • குழிக்கு 10 கிலோ அளவிற்கு தொழு உரத்தினை மேல் மண்ணுடன் கலந்து குழியினுள் இடவேண்டும். அத்துடன் வேப்பம் புண்ணாக்கு 250 கிராம் பியூரடான் 20 கிராம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 220 கிராம் இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் ஒரு குழிக்கு தலா 20 கிராம் என்ற அளவில் நடவின் போதும் 5 மாதங்கள் கழித்தும் இட வேண்டும்
  • நடவின் போது குழிக்கு 25 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் புளோரசன்ஸ் இட வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் முளைமுன் களைக்கொல்லியான ஃப்ளூக்ளோரலின் தெளிக்க வேண்டும்
  • பயிர் இடைவெளி மற்றும் மொத்த எண்ணிக்கை: குட்டை கேவண் - டிஷ், ஜி9, ரொபஸ்டா - 5 அடி x 7 அடி; பிற வகைகள் - 5 அடி x 8 அடி. ஒரு எக்டரில் சுமார் 3000 கன்றுகள் இடம் பெறுகின்றது.
  • கன்றுகளை குழியின் மையத்தில் நடவுசெய்து மேல் மண்ணைக் கொண்டு குழியினை நிரப்பி மெதுவாக அழுத்திவிட வேண்டும்
  • நடவு செய்து 45 நாட்கள் கழித்து சணப்பையை விதைத்து ஒரு மாதம் கழித்து மண்ணுடன் சேர்த்து உழ வேண்டும். இதனால் மண்ணிலுள்ள நூற்புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது

4. கரையும் உரப்பாசனம்:

  • வாழைக் கன்று ஒன்றிற்கு 200 : 300 கிராம் என்ற அளவில் தழை மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் பயிர்காலம் முழுதும் பிரித்து சொட்டு நீர் உரப்பாசனமாக வழங்க வேண்டும். மணிச்சத்தை அடியுரமாக நடவின்போதே வழங்கிவிட வேண்டும். நீர் தேவையை பொதுவான அடர்த்தியுள்ள கன்றுகளுக்கு ஒரு கன்றுக்கு 25 லிட்டர் ஒரு குழிக்கு 2 கன்றுகள் இருப்பின் ஒரு குழிக்கு 40 லிட்டர் மற்றும் ஒரு குழிக்கு 50 லிட்டர் என்ற அளவுகளில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்

பயிர்வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த 3 மாதங்கள் கழித்து ஃப்யூரடான் 20 கிராம் மற்றும் புங்க எண்ணெய் பிண்ணாக்கு 1/2 கிலோ இட்டு மண் அணைக்க வேண்டும்
  • நடவு செய்த 4, 6 மற்றும் 8 ஆம் மாதங்களில் மண் அணைக்க வேண்டும்
  • இடைக்கன்றுகள், நோய் தாக்கப்பட்ட மற்றும் காய்ந்த இலைகளை அவ்வப்போது கன்றின் வளர்ச்சிக்கேற்ப 6 முறை நீக்க வேண்டும்
  • நடவு செய்த 4 ஆம் மாதத்தில் 20 கிராம் ஃப்யூரடான் இட வேண்டும்
  • துத்தநாக சல்பேட்டு 0.5 சதவிகிதம், பெரஸ் சல்பேட் 0.2 சதவிகிதம், தாமிர சல்பேட்டு 0.2 சதவிகிதம் மற்றும் போராக்ஸ் 0.1 சதவிகிதம் என்ற அளவில் கலந்து நடவு செய்த 3, 5 மற்றும் 7 ஆம் மாதங்களில் தெளிக்க வேண்டும்
  • வாழைக் குலையின் கடைசி சீப்பு வெளிவந்தவுடன் ஒரு வாரத்திற்குள் ஆண் பூவை நீக்கிவிட்டு யூகலிப்டஸ் தைல மரக் குச்சிகள் அல்லது சவுக்கு மரக்குச்சிகள் மூலம் முட்டுக் கொடுக்க வேண்டும்
  • ஊடு பயிர் சாகுபடி: வெங்காயம், கொத்தமல்லி இலை, பீட்ரூட், தக்காளி (இரகம் மட்டும்) போன்ற ஊடுபயிர்களை வளர்க்கலாம்
  • வாழை நடவு செய்த 90 நாட்களுக்குள் ஊடுபயிர் சாகுபடியை முடித்து கொள்ள வேண்டும். நூற்புழுக்களை எதிர்க்கும் தன்மையுள்ள சணப்பை அல்லது செண்டுமல்லியை வளர்த்து அதிகபட்ச தழைப்பருவத்தில் மண்ணுடன் சேர்த்து உழுதுவிட வேண்டும்

முட்டுக்கொடுத்தல்:

  • குலவிட்டபின் ஊட்டச்சத்து தெளிப்பு: யூரியா 1 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் சல்ஃபேட்டு 1.5 சதவிகிதம் என்ற அளவில் கடைசி சீப்பு வெளிவந்தவுடனும் அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்தும் தெளிக்க வேண்டும்
  • கடைசி சீப்பு வெளிவந்த 15 நாட்களுக்குள் ஒளி ஊடுருவும் பாலித்தீன் பை கொண்டு வாழைக் குலைகளை மூடவேண்டும். பாலித்தீன் பைகளில் 4 சதத் துளைகளையிட்டு காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பழங்கள் நல்ல ஏற்றுமதித் தரத்துடன் பளபளப்பாகக் கிடைக்கும்

6. அறுவடை:

  • நன்கு வளர்ச்சியடைந்த வாழைக் குலைகளை அறுவடை செய்யவேண்டும்
  • பயிர்க்காலம் மற்றும் குலை எடை
  • காவன்டிஸ் - 12 மாதங்கள் - 25 முதல் 30 கிலோ
  • நெய்பூவன் - 11 மாதங்கள் - 12 கிலோ
  • இரஸ்தாளி - 13 மாதங்கள் - 12 கிலோ
  • எத்ரல் 5000 பிபிஎம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மி.லி) என்ற அளவில் சோடியம் ஹைட்ராக்சைடு உருண்டைகளுடன் சேர்த்து குலைகளின் மீது தெளித்து காய்களை கனியச் செய்யலாம்

ரோஜா

வடிகால் வசதியுள்ள அங்கக சத்து அதிகமுள்ள களிமண் கலந்த வண்டல் மண் அல்லது மணற்பாங்கான செம்மண் ஆகியவை ரோஜா செடி பயிரிட ஏற்றது மண்ணின் அமில காரத்தன்மை 6-7.5 என்ற அளவு நல்லது.
1. நடவு பொருள் தயாரிப்பு:

  • ரோசா போர்போரியானா, ரோசா மல்டிஃப்ளோரா மற்றும் ரோசா இண்டிகா ஒட்ரேட்டா ஆகியவை வேர்குச்சிகளாக பயன்படுத்த படுகின்றது
  • ‘T’ அல்லது கேடய முளை ஒட்டு முறையில் பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகின்றது
  • நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களே ஒட்டுக்கட்டுவதற்கு சிறந்த காலமாகும்
  • தண்டுக் குச்சிகளை 1000 பிபிஎம் என்ற அளவில் ஐ பி ஏ கரைசலில் நேர்த்தி செய்தால் ஒரு வருடத்திற்குள் செடிகள் நடவுக்கு தயாராகிவிடும்

2. நடவு வயல் தயாரிப்பு மற்றும் நடவு:

  • நடவு வயலினை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 834 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தினை 25 டன்கள் தொழு உரத்துடன் அடியுரமாக இட வேண்டும்
  • ஒரு எக்டருக்கு 2 கிலோ என்ற அளவில் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களையும் 2.5 கிலோ சூடோமோனஸ் பூஞ்சானக் கொல்லியினையும் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்
  • செடி நடுவதற்கு 8-12 மணி நேரம் முன்னதாக சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்
  • நடவிற்கு முன் நடவு வயலை முழுவதாக நனைத்த பின் க்ளைபாஸ்பேட் களைக்கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 8 மி.லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
  • செடிகளை இரண்டு வரிசை முறையில் 90 x 60 x 45 செ.மீ என்ற இடைவெளியில் நடவேண்டும்
  • நடவு செய்த ஒரு மாதத்திற்கு பின் போக்கு நாற்றுகளை நிரப்ப வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • நடவு முதல் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் ஒரு எக்டருக்கு 178 : 178 : 356 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை ஐந்து நாட்கள் இடைவெளியில் உரப்பாசனமாக கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • கவாத்து: செடியின் குறைந்த பட்ச வளர்ச்சி நிலவும் பருவத்தில் செடியில் உள்ள காய்ந்த, நோய் பிடித்த மற்றும் ஒரு முறை பூத்து முடிந்த கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். வெட்டிய பகுதியில் போர்டாக்ஸ் மற்றும் கார்போரைல் கலவையை தடவி நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டும்
  • மொட்டுக்களை அகற்றுதல்: பக்ககிளைகளை அகற்றுவதனால் பூக்கள் பெரியதாக இருக்கும்
  • நடவு செய்த மூன்றாம் மாதம் 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் 100 கிராம் எலும்புத் தூள் ஆகியவற்றை செடிக்கு இட வேண்டும்
  • மேலும் மூன்று மாதம் கழித்து இதனை மற்றொரு முறை அளிக்க வேண்டும்
  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாளில் களையெடுக்க வேண்டும்

5. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • பூக்களை காலை நேரங்களில் பூ விரியும் முன்பு அறுவடை செய்ய வேண்டும்
  • பூக்களை 20 பூக்கள் கொண்ட கட்டுக்களாக கட்டி அட்டைப் பெட்டிகளில் அடுக்கி 4 மணி நேரம் 6-80 செ வெப்ப நிலையில் வைத்து பின் 2-50 செ வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும்

சாமந்தி

1. வேர்குச்சிகள் தயார் செய்தல்:

  • நடவு பருவம்: பிப்ரவரி - மார்ச்
  • சாமந்தி பொதுவாக வேர் கன்றுகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றது
  • 10-15 பை வேர் கன்றுகள் ஒரு எக்டர் பயிருக்கு தேவைப்படுகின்றது. கேப்டான் அல்லது 0.2 சதவிகித பிரேசிகாலுடன் கன்றுகளை நேர்த்தி செய்ய வேண்டும்
  • வேர் பிடிப்புத் திறனை அதிகப்படுத்துவதற்கு செரடிகஸ் 1 பிபிஎம் அல்லது என்ஏ 25 பிபிஎம் என்ற அளவில் உள்ள கரைசலில் வேர் கன்றுகளை நனைக்க வேண்டும்

2. நடவு வயல் தயாரிப்பு மற்றும் நடவு:

  • நடவு வயலினை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்
  • தொழுஉரம் 25 டன்கள் மற்றும் 75 சதவிகித பரிந்துரைக்கப்பட்ட பாஸ்பேட் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா முறையே 2 கிலோ, சூடோமோனஸ் 2.5 கிலோ என்றளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும்
  • நான்கு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு இணை குழாய்கள் பாத்தியின் மையத்தில் இருக்கும்படி வைக்க வேண்டும்
  • மேட்டுப்பாத்திகளை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் சுமார் 8-12 மணி நேரம் நீரால் நனைக்க வேண்டும்
  • நேர்த்தி செய்யப்பட்ட 15 செ.மீ நீளம் கொண்ட வேர்க்கன்றுகளை 90 x 60 x 30 செ.மீ என்ற இடைவெளியில் இரண்டு வரிசை முறையில் ஒரு குழிக்கு இரண்டு என்ற அளவில் நடவு செய்ய வேண்டும்

3. கரையும் உரப்பாசனம்:

  • நடவு முதல் ஒரு எக்டருக்கு 125 : 120 : 25 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசனமாக கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

4. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • களை வளர்ச்சியினை பொறுத்து நடவு செய்த பின் மூன்று முறை களையெடுத்து மண் அணைக்க வேண்டும்
  • நுனிகிள்ளுதல் மற்றும் மொட்டு நீக்குதல்: அதிகபட்ச கிளைகளை வளரச் செய்வதற்கு நுனியைக் கிள்ளி விட வேண்டும். தரமான பூக்களை உற்பத்தி செய்வதற்கு மிகுதியாகவுள்ள மொட்டுக்களை நீக்கிவிட வேண்டும்

5. அறுவடை:

  • நன்கு விரிவடைந்த பூக்களை மாலை நேரத்தில் பறத்து பெட்டிகளில் நிரப்பி சந்தைக்கு அனுப்ப வேண்டும்

செண்டுமல்லி

1. நாற்று உற்பத்தி:

  • வீரிய ஒட்டு விதைகளை பதப்படுத்தப்பட்ட தென்னை நார்க்கழிவு நிரப்பப்பட்ட குழித்தட்டுகளில் நிழல் வலை நாற்றங்கால் முறையில் உற்பத்தி செய்ய வேண்டும். குட்டை இரகத்திற்கு 800 குழித்தட்டுகள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ விதைகளுடன் கேப்டான் 3 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு பயிரிட குட்டை இரகத்திற்கு 75,000 விதைகளும், நெட்டை இரகத்திற்கு 55,000 விதைகளும் தேவை. ஒரு குழித்தட்டிற்கு 1.25 கிலோ என்ற அளவில் தென்னை நார்க்கழிவை நிரப்பி ஒரு குழிக்கு ஒரு விதை என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும்
  • குழித்தட்டுகளை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி 3 நாட்களுக்கு பாலித்தீன் பையினைக் கொண்டு போர்த்தி வைக்க வேண்டும். நான்காவது நாள் நிழல் வலைக் குடிலின் அடியில் அமைக்கப்பட்டுள்ள மேட்டுப்பாத்தியின் மீது குழித்தட்டுகளை பரப்பிவைக்க வேண்டும்
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் பூவாலி கொண்டு நாற்றுக்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்
  • 19 : 19 : 19 உரத்தினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் 15 ஆம் நாளில் 2 கிராம் காப்பர் ஆக்ஸி க்ளோரைடுடன் கலந்து தெளிக்க வேண்டும்
  • விதைத்த 25 நாட்கள் கழித்து செடிகளை நடவு செய்யலாம்

2. நடவு வயல் தயாரிப்பு:

  • உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்
  • 25 டன்கள் தொழுஉரம் மற்றும் 75 சதவிகித பரிந்துரைக்கப்பட்ட பாஸ்பேட் ஆகியவற்றை அடியுரமாக இட வேண்டும்
  • அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இரண்டும் தலா 2 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழுவுரத்துடனும் மற்றும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கும் இட வேண்டும். இரண்டு அடி அகலமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்

3. இடைவெளி மற்றும் பயிர் எண்ணிக்கை:

  • ஸ்ட்ரா மஞ்சள் வீரிய ஒட்டுகள் - ஒரு பாத்திக்கு 3 வரிசைகள் (45 x 30 செ.மீ) - 74,000 செடிகள் / எக்டர்
  • கோல்டன் மஞ்சள் ஆரஞ்சு - இரட்டை வரிசை முறை (60 x 30 செ.மீ) - 554,000 செடிகள் / எக்டர்
  • இரகங்களுக்கு - இரட்டை வரிசை முறை (60 x 30 செ.மீ) - 554,000 செடிகள் / எக்டர்

4. நடவு:

  • நடவுக்கு முன் சொட்டு நீர்பாசன முறையில் நடவு வயலை 8-12 மணி நேரம் நீர் விட வேண்டும்
  • முளைமுன் களைக்கொல்லியை (ஸ்டாம்ப்) ஒரு எக்டருக்கு 3 லிட்டர் என்ற அளவில் நடவுக்கு முன் தெளிக்க வேண்டும்
  • 25 நாட்கள் வயதான ஆரோக்கியமான செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்
  • போக்கு நாற்றுக்களை ஒரு வாரத்திற்குள் நிரப்ப வேண்டும்

5. கரையும் உரப்பாசனம்:

  • நடவு செய்த நாள் முதல் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 90 : 90: 75 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை உரப்பாசனமாக மூலம் கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்

6. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்

7. அறுவடை:

  • நடவு செய்த 60 ஆம் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்

சைனா ஆஸ்டர்

1. மண் மற்றும் தட்ப வெப்ப நிலை:

  • நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் குளிர் கால நிலையில் நன்கு வளரும்

2. பயிர் பெருக்கம்:

  • விதை மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகின்றது
  • விதையளவு : 2-3 கிலோ / எக்டர்

3. நடவு வயல் தயாரிப்பு:

  • நடவு வயலினை உளிக்கலப்பை கொண்டு ஒரு முறையும், பின் சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும் உழுதபின் கொக்கிக் கலப்பை கொண்டு இரண்டு முறை நன்கு உழ வேண்டும்
  • கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 25 டன்கள் தொழுஉரம் இட வேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட பாஸ்பேட் 75 சதவிகித அடியுரமாக இட வேண்டும்
  • நான்கு அடி அகலமும் கொண்ட மேட்டுப்பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைத்து சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

4. விதைப்பு:

  • விதைகளை நேரடியாக மேட்டுப்பாத்தியில் விதைக்க வேண்டும்
  • ஒரு பாத்திக்கு 7 வரிசை என்ற அளவில் 15 செ மீ இடைவெளியில் 2 செ மீ ஆழத்தில் கோடு போடவேண்டும்
  • விதைகளை கோடுகளில் விதைத்து மணல் மற்றும் மாட்டு சாண எருவு கலவை கொண்டு மூடிவிட வேண்டும்

5. பயிர் எண்ணிக்கை:

  • ஒவ்வொரு பாத்தியிலும் 7 வரிசை ஆஸ்டர் செடிகள் 15 செ.மீ இடைவெளியில் காணப்படும்
  • அதிகமுள்ள செடிகளைக் களைத்து இரண்டு செடிகளுக்கு இடையே 15 செ.மீ இடைவெளி விட வேண்டும்

6. கரையும் உரப்பாசனம்:

  • பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் ஒரு எக்டருக்கு 100 : 200: 200 கிலோ என்ற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மூன்று நாட்கள் இடைவெளியில் உரப்பாசன முறையில் கொடுக்க வேண்டும்.
  • இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்
  • நடவு செய்த முதல் தினமும் ஒரு மணி நேரம் சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்

7. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த 30 மற்றும் 60 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • நடவு செய்த 30 ஆம் நாள் முதன்மை தண்டை கிள்ளி விடுவதன் மூலம் அதிக அளவில் பக்கக் கிளைகளை உருவாக்க முடியும்
  • பூக்கும் பருவத்தில் நீர்ப்பாசன இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் மலர்கள் ஒரே சீரான அளவில் விரியும்

8. அறுவடை மற்றும் அறுவடை பின்செய் நேர்த்தி:

  • கொய் மலர்களுக்கு நீண்ட தண்டுடன் கூடிய மலர்களை வெட்டி எடுக்க வேண்டும்
  • உதிரிப் பூக்கள் அறுவடை செய்யும் போது பூக்களை தனித்தனியாக பூக்காம்புடன் சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்
  • 0.2 சதம் அலுமினியம் சல்பேட் மற்றும் 0.2 சதம் சுக்ரோஸ் கரைசலில் பூக்களை நனைத்து எடுத்து வைப்பதன் மூலம் பூக்களின் வாழ்நாள் எட்டு நாட்கள் வரை அதிகரிக்கலாம்

கோல்டன் ராட்

1. பயிர் பெருக்க முறை:

  • வேர் தண்டுகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகின்றது

2. வேர் தண்டு நேர்த்தி:

  • வேர் தண்டை 0.3 சதம் கேப்டான் அல்லது 0.2 சதம் ப்ரேசிகால் கரைசலில் நேர்த்தி செய்வதால் அழுகல் தவிர்க்கலாம்.
  • விரைவான வேர் பிடிப்பிற்கு செராடிக்ஸ் - 1 பொடி அல்லது 25 பிபிஎம் என்ற அளவில் என் ஏஏ உபயோகிக்க வேண்டும்

3. நடவு:

  • ஒரு குழிக்கு 10-15 செ மீ நீளமுள்ள இரண்டு வேர் தண்டுகளை நடவு செய்ய வேண்டும்
  • வேர் தண்டுகளை 15 செ மீ என்ற வரிசை இடைவெளியில் 7 வரிசைகளை ஒவ்வொரு மேட்டுப்பாத்தியிலும் நடவு செய்ய வேண்டும்
  • செடிகளுக்கு இடையே 15 செ மீ இடைவெளியில் விட வேண்டும்
  • நடவு செய்த 2 மாதத்தில் செடிகளின் வளர்ச்சி மொத்த நிலப்பரப்பையும் கவர்ந்து விடும்

4. கரையும் உரப்பாசனம்:

  • நடவு செய்த நாள் முதல் பயிரின் வளர்ச்சிக் காலம் முழுவதும் மூன்று நாட்கள் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 150 : 175: 150 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை உரப்பாசனம் மூலம் கொடுக்க வேண்டும். இதில் 75 சதவிகித பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும்
  • நடவு செய்த நாள் முதல் தினமும் ஒர மணிநேரம் சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும்

5. பயிர் வளர் இடைத் தொழில்நுட்பம்:

  • நடவு செய்த 15 மற்றும் 45 ஆம் நாள் களையெடுக்க வேண்டும்
  • பூக்கள் மற்றும் காம்பின் நீளத்தை அதிகரிக்க நடவு செய்த 30 நாட்களுக்கு பின் 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை ஜி. ஏ. 3 25 பிபிஎம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்

6. அறுவடை:

  • முதல் அறுவடையை நடவு செய்த 120 நாட்களுக்கு பின் மேற்கொள்ள வேண்டும்
  • தேவைக்கேற்ப வார இடைவெளியில் 2 வருடங்களுக்கு அறுவடையை மேற்கொள்ளலாம

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 9/29/2019

© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate